பழநியில் தைப்பூச திருவிழா நாளை தொடக்கம்

பிப்ரவரி 1-ம் தேதி மாலை தேரோட்டம்
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

Updated on
1 min read

பழநி: ​திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் தைப்​பூசத் திரு​விழா பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் நாளை (ஜன. 26) கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வாக பிப். 1-ம் தேதி மாலை தேரோட்​டம் நடை​பெறுகிறது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உபகோயி​லான பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் தைப்​பூசத் திரு​விழா நாளை (ஜன. 26) காலை 9.50 மணிக்கு கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. 10 நாட்​கள் நடை​பெறும் திரு​விழா​வில் தின​மும் சுவாமி ரத வீதி​களில் வெள்ளி ஆட்​டுக்​கி​டா, வெள்ளி காமதேனு, தங்கமயில் உள்​ளிட்ட வாக​னங்​களில் வீதி​யுலா வந்து பக்​தர்​களுக்கு காட்​சி​யளிப்​பார்.

விழா​வின் 6-ம் நாளாான வரும் 31-ம் தேதி இரவு திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெற உள்​ளது. அன்று இரவு சுவாமி மணக்​கோலத்​தில் வெள்​ளித்​தேரில் உலா வரு​வார். விழா​வின் முக்​கிய நிகழ்​வாக பிப். 1-ம் தேதி தைப்​பூசத்​தன்று காலை 5 மணிக்கு சண்​முகந​திக்கு எழுந்​தருளல், காலை 11.15 மணிக்கு மேல் தேரில் சுவாமி எழுந்​தருளல், மாலை 4 மணிக்கு மேல் தேரோட்​டம் நடை​பெற உள்​ளது.

நான்கு ரத வீதி​களில் வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி தேரில் வலம் வந்து பக்​தர்​களுக்கு காட்சி அளிப்பார். அன்று இரவு தந்​தப்​பல்​லக்​கில் தேர்க்​கால் பார்த்​தல் நிகழ்ச்சி நடை​பெறும். பிப். 4-ம் தேதி காலை திரு​வூடல் நிகழ்ச்​சி​யும், இரவு 7 மணிக்கு தெப்​பத்​தேர் நடை​பெறும். அன்று இரவு 11 மணிக்கு கொடி இறக்​கத்​துடன் விழா நிறைவு​பெறும்.

தைப்​பூசத் திரு​விழாவை முன்​னிட்​டு, மாலை அணிந்து ஏராள​மான பக்​தர்​கள் பாத​யாத்​திரை​யாக வந்த வண்​ணம் உள்​ளனர். அவ்​வாறு வரும் பக்​தர்​களுக்கு தேவ​ஸ்தானம் சார்​பில் நாளை (ஜன. 26) முதல் 10 நாட்​களுக்கு அன்​ன​தானம் வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, ஒட்​டன்​சத்​திரம் குழந்தை வேலப்​பர் கோயில் அருகே உள்ள பக்​தர்​கள் ஓய்​வுக்​கூடத்​தில் தின​மும் 14,000 பேர், பழநி அரு​கே​யுள்ள கொங்​கூர் பக்​தர்​கள் ஓய்​வுக்​கூடத்​தில் தின​மும் 6,000 பேர் என மொத்​தம் 20,000 பக்​தர்​களுக்கு காலை முதல் இரவு வரை அன்​ன​தானம் வழங்​கப்பட உள்​ளது.

<div class="paragraphs"><p>தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்.</p></div>
நெகிழவைக்கும் ‘தனிமை பென்குயின்’ - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in