திருமலையில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியீடு

திருமலையில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியீடு
Updated on: 
1 min read

திருமலை: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தசரா விடுமுறை காலம் என்பதாலும், புரட்டாசி மாதம் என்பதாலும் இந்த நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு, கடந்த வருட பிரம்மோற்சவ விழாவினைவிட 30% பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த விழா நடைபெறும் நாட்களில் விஐபி பிரேக் தரிசன முறையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

மேலும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று (7-ம் தேதி) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது. இதேபோன்று, மூத்த குடிமக்கள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், மாற்றுத் திறனாளி பக்தர்களுக்கான சிறப்பு தரிசனங்களும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியீடு
3.5 கிலோ தங்க நகை திருட்டு புகார் அளித்தவரிடம் போலீஸார் அத்துமீறல்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in