3.5 கிலோ தங்க நகை திருட்டு புகார் அளித்தவரிடம் போலீஸார் அத்துமீறல்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

Updated on: 
1 min read

புதுடெல்லி: ​நகை திருட்டு குறித்து புகார் அளித்த நகைக்கடை உரிமையாளரிடம் போலீஸார் அத்துமீறியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்​கு​மாறு உச்​ச நீ​தி​மன்​றம் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது.

திரு​வண்​ணா​மலையை சேர்ந்த நகைக்​கடை உரிமை​யாளர் பி.சுந்​தர​ராஜன் என்​பவர் 2004-ம் ஆண்​டில் தனது கடையி​லிருந்து 3.5 கிலோ தங்க நகை​கள் திருடப்​பட்​டது தொடர்​பாக புகார் அளித்த நிலை​யில், அவரைமிரட்​டி​யும், துன்​புறுத்​தி​யும் காப்​பீட்​டுக்​காக கொடுக்​கப்​பட்ட பொய்​யான வழக்கு என எழுதி வாங்​கியதோடு ரூ.5 லட்​சம் மற்​றும் 620 கிராம் வெள்ளி பொருட்​களை காவல் அதி​காரி​கள் எடுத்துசென்​றுள்​ளனர்.

இதுதொடர்​பாக வந்த பத்​திரிகை செய்தி அடிப்​படை​யில் வழக்கை தாமாக முன்​வந்து விசா​ரித்த மாநில மனித உரிமை​கள் ஆணை​யம், சுந்​தர​ராஜன் துன்​புறுத்​தப்​பட்​டது உறு​தி​யான​தால், அவருக்கு ரூ.10 லட்​சம் இழப்​பீ​டாக வழங்​க​வும், இத்​தொகையை காவல் கண்​காணிப்​பாளர் ஏ.பாரி, துணை கண்​காணிப்​பாளர் ராமகிருஷ்ணன், காவல் ஆய்​வாளர் துரை​சாமி, உதவி ஆய்​வாளர் ரமேஷ் ஆகி​யோரிட​மிருந்து வசூலிக்​க​வும் உத்​தர​விட்​டது.

இதனை ஏற்​றுக்​கொண்ட தமிழக அரசு, அரசாணை பிறப்​பித்​து, இழப்​பீட்​டுத் தொகையை உடனடி​யாக பாதிக்​கப்​பட்​ட​வ​ருக்கு பட்​டு​வாடா செய்ய உத்​தர​விட்​டது. இதை எதிர்த்​து, காவல் அதி​காரி​கள் ராமகிருஷ்ணன், துரை​சாமி, ரமேஷ் ஆகி​யோர் தாக்​கல் செய்த மனுக்​களை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. அதேவேளை​யில், காவல் கண்​காணிப்​பாளர் ஏ.பாரி, இந்த சம்​பவத்​தில் தொடர்​பில்​லாத தனக்கு விதிக்​கப்​பட்ட அபராத தொகையை ரத்து செய்​யக்​கோரி சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் தொடர்ந்த வழக்கை பரிசீலித்த நீதி​மன்​றம், இழப்​பீடு வழங்க தமிழக அரசு பிறப்​பித்த அரசாணையை மொத்​த​மாக ரத்து செய்​தது.

அந்த உத்​தரவை எதிர்த்​து, சுந்தர ராஜன் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார். அந்த மனு நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், பிரசன்​னா.பி.வ​ராலே ஆகி​யோர் அடங்​கிய அமர்வில் விசா​ரணைக்கு வந்​த​போது, மனு​தா​ரர் சார்​பில் வழக்​கறிஞர் லட்​சுமணன் ராஜா ஆஜராகி, ‘சென்னை உயர்​நீ​தி​மன்​றம் வழக்கை தீர ஆரா​யாமல் மனு​வில் இல்​லாத கோரிக்​கையை கையிலெடுத்து உத்​தரவு பிறப்​பித்​தது ஒரு தவறான நடவடிக்​கை​யாகும். எனவே இந்த விவ​காரத்​தில் பாதிக்​கப்​பட்​டுள்ள மனு​தா​ரருக்கு இழப்​பீட்டு தொகையை வட்​டி​யுடன் சேர்த்து வழங்க உத்​தர​விட வேண்​டும்' என கோரிக்கை வைத்​தார்.

அப்​போது நீதிப​தி​கள், ‘மனு​வில் வைக்​கப்​ப​டாத கோரிக்கை மீது எவ்​வாறு உயர்​ நீ​தி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​தது?' என கேள்வி எழுப்​பியதோடு, இந்த மனு தொடர்​பாக தமிழக அரசு மற்​றும் காவல்​துறை அதி​காரி​கள் ஏ.பாரி, ரா​மகிருஷ்ணன், துரைசாமி, ரமேஷ் ஆகி​யோர் பதில்​ அளிக்க நோட்​டீஸ்​ பிறப்​பித்​து உத்​தரவிட்​டனர்

<div class="paragraphs"><p><em><ins>உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்</ins></em></p></div>
உத்தராகண்டில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும் நிலஅதிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in