நாகூர் தர்காவில் ரம்ஜான் தொழுகை: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு

நாகூர் தர்காவில் நேற்று ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இளைஞர்கள்.

நாகூர் தர்காவில் நேற்று ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இளைஞர்கள்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் தர்காவில் நேற்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு 30 நாட்கள் நோன்பு நோற்ற முஸ்லிம்கள் நேற்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, பிரசித்திபெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து,ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள 56 பள்ளிவாசல்கள், தர்காக்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில், உலகம் முழுவதும் சமாதானமும் சாந்தியும் உண்டாவதற்கும், ஈரான் போர் முடிவுற்று அமைதி நிலவவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் தவறாமல் 100% வாக்களித்து, தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் எனவும் நாகூர் தர்காபரம்பரை அறங்காவலர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் தலைமையில் முஸ்லிம்கள்பிரார்த்தித்தனர். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

<div class="paragraphs"><p>நாகூர் தர்காவில் நேற்று ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இளைஞர்கள்.</p></div>
ஈரான் மீதான தாக்குதலை கணிசமாக அதிகரிக்க இஸ்ரேல் முடிவு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in