நவம்பர் 16-ம் தேதி திருமலையில் புஷ்பயாகம்

நவம்பர் 16-ம் தேதி திருமலையில் புஷ்பயாகம்
Updated on: 
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர புஷ்பயாகம் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, 15-ம் தேதி அங்குராற்பன நிகழ்ச்சிகள் வைகானச ஆகம சாஸ்திரத்தின்படி நடைபெறும். 16-ம் தேதி நைவேத்தியத்துக்கு பின்னர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் ஊர்வலமாக கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படு வர். அங்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பின்னர், மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பல டன் மலர்களாலும், துளசி, தவனம், வில்வம் ஆகிய பவித்ர இலைகளாலும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்பயாகம் நடைபெறும். சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பின்னர், உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

நவம்பர் 16-ம் தேதி திருமலையில் புஷ்பயாகம்
இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் காடி ஐசன்கோட்: புதிய கூட்டணி அரசில் நெதன்யாகு கட்சியை இணைக்க தீவிர முயற்சி

X