வடபழனி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா: லட்சார்ச்சனையுடன் தொடங்கியது

வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.

வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.

Updated on
1 min read

சென்னை: வடபழனி முரு​கன் கோயில் பங்​குனி உத்​திரத் திரு​விழா லட்​சார்ச்​சனை​யுடன் தொடங்​கியது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

சென்​னை​யின் ஆன்​மிக அடை​யாளங்​களில் ஒன்​றாகத் திகழும் வடபழனி முரு​கன் கோயில், சாதுக்​களால் பிர​திஷ்டை செய்​யப்​பட்ட பெரு​மைக்​குரியது.

பழனிக்​குச் சென்று முரு​க​னைத் தரிசிக்க இயலாத பக்​தர்​கள், தங்​கள் நேர்த்​திக்​கடனைச் செலுத்தி அருள்​பெறும் வடபழனி​யாக இத்​தலம் போற்​றப்​படு​கிறது.

இங்கு முரு​கப்​பெரு​மான் பாதரட்​சை​யுடன் காட்​சி​யளிப்​பது வேறெங்​கும் காண முடி​யாத தனிச்​சிறப்​பாகும். இக்​கோயி​லில் பங்​குனி உத்​திரப் பெரு​விழா நேற்று மிகச்​சிறப்​பாகத் தொடங்​கியது.

வரும் மார்ச் 31-ம் தேதி வரை முரு​கப்​பெரு​மானுக்கு லட்​சார்ச்​சனை நடை​பெறும். நேற்று நடை​பெற்ற தொடக்க விழா​வில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு முரு​க​னின் அருளைப் பெற்​றனர்.

தின​மும் காலை 7.30 முதல் மதி​யம் 12.30 மணி வரை​யிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை​யிலும் லட்​சார்ச்​சனை நடக்​கிறது.லட்​சார்ச்​சனை​யில் பங்​கேற்க ரூ.250 கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் பங்​கேற்​கும் பக்​தர்​களுக்கு விசேஷ லட்​சார்ச்​சனை பிர​சாதங்​கள் வழங்​கப்​படும். பங்​குனி உத்​திர​மான வரும் ஏப்​ரல் 1-ம் தேதி தீர்த்​த​வாரி மற்​றும் யாக​சாலை பூஜைகள் நிறைவு செய்​யப்​பட்​டு, கலசாபிஷேகத்​துடன் பூஜைகள் பூர்த்​தி​யாகின்​றன.

அன்று இரவு 7 மணி​யள​வில், சிறப்பு அலங்​காரத்​தில் முரு​கப்​பெரு​மான் திரு​வீதி உலா வந்து பக்​தர்​களுக்​குக் காட்சி தரு​வார். பங்​குனி உத்​திரத்தை முன்​னிட்டு ஏப்​ரல் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 3 நாட்​களுக்​குத் தெப்​பத் திரு​விழா நடை​பெறுகிறது.

தின​மும் இரவு 7 மணிக்கு ஜொலிக்​கும் மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்ட தெப்​பத்​தில் சுவாமி வலம் வரு​வார். இத்​திரு​விழா​வின் போது வேத​பா​ராயணங்​களும்​, இன்​னிசை நாதஸ்​வரக்​ கச்சேரியும் நடைபெறும்.

<div class="paragraphs"><p>வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.</p></div>
ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் ‘டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க விரைந்து பணிச்சான்று: ஆதிதிராவிடர் நல ஆணையர் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in