ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் ‘டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க விரைந்து பணிச்சான்று: ஆதிதிராவிடர் நல ஆணையர் உத்தரவு

ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் ‘டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க விரைந்து பணிச்சான்று: ஆதிதிராவிடர் நல ஆணையர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை பள்​ளி, சமூகநீதி விடு​தி​களில் பணிபுரி​யும் இடைநிலை ஆசிரியர்​கள் மற்​றும் காப்​பாளர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் காப்​பாளர்​கள், தொடக்​கப் பள்​ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்​களில் தகு​தித் தேர்வு (டெட்) தாள்-1 மற்​றும் தாள்-2 தேர்ச்சி பெறாதவர்​கள் பணி​யைத் தொடர​வும் பதவி உயர்வு பெற​வும் டெட் தேர்ச்சி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது ஆசிரியர் தேர்வு வாரி​யம் டெட் தேர்​வுக்​கான அறி​விப்பை வெளி​யிட்​டுள்ள நிலை​யில், இத்​துறை​யில் பணி​யாற்​றும் இடைநிலை மற்​றும் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் எமிஸ் ஐடியை பயன்​படுத்தி விண்​ணப்​பிக்​க​வும், எமிஸ் ஐடி இல்​லாதவர்​கள் பள்​ளி​களில் விவரங்​களைப் பதிவுசெய்து விரை​வாக எமிஸ் ஐடி பெற​வும் பள்​ளிக்​கல்​வித் துறை மூலம் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே, எமிஸ் ஐடி இல்​லாத ஆசிரியர்​கள் தாங்​கள் பணிபுரி​யும் விடு​திக்கு அரு​கில் உள்ள தலைமை ஆசிரியரை அணுகி தங்​களுக்​கான எமிஸ் ஐடி பெறும் வகை​யில் தேவை​யான விவரங்​களை எமிஸ் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும்.

மேலும் டெட் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்​களுக்​குத் தேவை​யான ஆவணங்​களைச் சரி​பார்த்து உரிய படிவத்​தில் விரைந்து பணிச்​சான்று வழங்​க​வும், தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க கடைசி நாள் ஏப்​ரல் 10 என்​ப​தால் சம்​பந்​தப்​பட்ட ஆசிரியர்​களை விரை​வாக விண்​ணப்​பிக்க அறி​வுறுத்​த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நல அலு​வலர்​களுக்கும் ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை ஆணை​யர் த.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் ‘டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க விரைந்து பணிச்சான்று: ஆதிதிராவிடர் நல ஆணையர் உத்தரவு
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: சான்றிதழை முழுமையாக பதிவேற்ற தேர்வர்களுக்கு அவகாசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in