தி.மலை பரணி தீபம், மகா தீபம்: இலவச ஆன்லைன் டிக்கெட் பெற இன்று முதல் முன்பதிவு

நவ.20 மாலை 3 மணி வரை அனுமதி
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
2 min read

திருவண்ணாமலை: திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் கார்த்​திகை தீபத்​திரு​விழா​வில் பரணி தீபம் மற்​றும் மகாதீபம் தரிசனத்​துக்கு நவ.18-ம்தேதி (இன்று) முதல் ‘ஆன்​லைன்’ மூலம் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம் என கோயில் நிர்​வாகம் சார்​பில் அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து அண்​ணா​மலை​யார் கோயில் நிர்​வாகம் சார்​பில் வௌியிடப்​பட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், ‘‘திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் கடந்த ஆண்​டுகளில் நடை​பெற்ற கார்த்​திகை தீபத்​திரு​விழா​வின் போது, பரணி தீபம் மற்​றும் மகாதீபம் தரிசனத்​துக்​கான ரூ.500 மற்​றும் ரூ.600 மதிப்​பிலான கட்​டண நுழைவு சீட்​டுகள் 1,600 எண்​ணிக்​கை​யில் இணை​யதளம் மூலம் முன்​ப​திவு செய்​யப்​பட்டு வந்​தது.

அதன்​படி, இந்​தாண்டு நடை​பெறும் தீபத்​திரு​விழா​வில் பக்​தர்​களின் நலன்​கருதி, இந்து சமய அறநிலைய துறை அமைச்​சர் ரமேஷ் அறி​வுறுத்​தலின்​படி, பரணிதீபம் மற்​றும் மகாதீபம் தரிசனத்​துக்​கான நுழைவு சீட்​டுகள் முற்​றி​லும் இல​வச​மாக 3,000 எண்​ணிக்​கை​யில் ‘ஆன்​லைன்’ மூலம் முன்​ப​திவு செய்​யும் வகை​யில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, நவ.24-ம் தேதி அன்று காலை நடை​பெறவுள்ள பரணிதீபத்​துக்கு திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த உள்​ளூர் பக்​தர்​களுக்கு 500 நுழைவு சீட்​டுகள்.

திரு​வண்​ணா​மலை மாவட்​டம் தவிர்த்த பிற மாவட்​டங்​களைச் சேர்ந்த பக்​தர்​களுக்கு 500 நுழைவு சீட்​டுகளும், அன்​றைய தினம் மாலை மகாதீபம் தரிசனத்​துக்கு திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த உள்​ளூர் பக்​தர்​களுக்கு 1,000 நுழைவு சீட்​டுகள், பிற மாவட்​டங்​களைச் சேர்ந்த பக்​தர்​களுக்கு 1,000 நுழைவு சீட்​டுகள் வழங்​கப்​பட​உள்​ளன.

இத்​தகைய நுழைவு சீட்​டுகளை பெறவிரும்​பும் பக்​தர்​கள், ஆதார் எண்ணை பயன்​படுத்தி, அண்​ணா​மலை​யார் கோயி​லின் அதி​காரப்​பூர்வ இணை​ய தளமான http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரி​யில் நவ.18-ம் தேதி (இன்று) காலை 11.00 மணி முதல் நவ.20-ம் தேதி அன்று மாலை 3 மணிவரை முற்​றி​லும் இல​வச​மாக ‘ஆன்​லைன்’ மூலம்​முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

மேலும், நவ.20-ம் தேதி அன்று மாலை 4 மணி​யளவில், ‘ஆன்​லைன்’ முன்​ப​திவு செய்த பக்​தர்​களில் கணினி மூலம் தானியங்கி குலுக்​கல் முறை​யில் பயனாளி​கள் தேர்வு செய்​யப்​படுவார்​கள்.

இவ்​வாறு தேர்வு செய்​யப்​படும் பக்​தர்​களுக்கு, மின்​னணு நுழைவு சீட்​டினை (e-Ticket) பதி​விறக்​கம் செய்​வதற்​கான இணைப்​புடன் கூடிய குறுஞ்​செய்தி அவர்​கள் முன்​ப​தி​வின் போது அளித்த கைபேசி எண்​ணுக்​கும், மின்​னஞ்​சல் வாயி​லாகவும் தகவல் அனுப்பி வைக்​கப்​படும்.

தேர்வு செய்​யப்​பட்ட பக்​தர்​கள் தங்​களுக்​கான மின்​னணு நுழைவு சீட்​டினைப் பதி​விறக்​கம் செய்து, நவ.24-ம் தேதி அன்று கோயி​லின் நுழைவு வாயி​லில் அதனை காண்​பித்து, ஸ்​கேன் செய்த பின்​னர் தீப தரிசனத்​துக்கு அனுமதிக்​கப்​படுவார்​கள்.

மேலும், ஆதார் அட்​டையை அடை​யாள சான்​றாக கொண்டு சரிபார்த்த பின்​னரே அனுமதிக்​கப்​படுவார்​கள். பரணி தீபத்​துக்கு பதிவு செய்​பவ​ரால், மகா தீபத்​துக்கு பதிவு செய்ய இய​லாது. மகா தீபத்​துக்கு பதிவு செய்​பவ​ரால் பரணி தீபத்​துக்கு பதிவு செய்ய இய​லாது.

பரணி தீபத்​துக்​கான முன்​ப​திவு செய்​பவர்​கள் ஒரு சீட்டு மட்​டுமே பதிவு செய்ய இயலும். மகா தீபத்​துக்கு பதிவு செய்​பவர்​கள் வெவ்​வேறு ஆதார் எண்​களை கொண்டு 2 பதிவு​கள் மேற்​கொள்​ளலாம்” என தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
வாழ்க்கையை தொலைத்த மதுரை யூடியூபர் ஜோடி: ரியல் - ரீல் வேறுபடுத்த கற்றுக்கொள்வது எப்படி?

X