

மதுரை: சோசியல் மீடியாவால் பிரபல மான மதுரை யூடியூபர் ஜோடி நிஷாந்த் - மீனாட்சி அதே சோசியல் மீடியாவாலேயே தங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் நிலையில், சமூக வலைதளங்களில் நாம் பார்க்கும் பிம்பத்தையும், ஒருவருடைய உண்மையான குணத்தையும் வேறுபடுத்திப் பார்க்கக் கற்றுக்கொள்வதே இன்றைய டிஜிட்டல் காலத்தின் முக்கியமான உளவியல் விழிப்புணர்வாகும் என்று உளவியலாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ‘தனிஷ்க்’ நகைக் கடையில் கடந்த நவம்பர் 12-ம் தேதி நடைபெற்ற ரூ.21 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக்கொள்ளைச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் இந்த கொள்ளைச் சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் அல்லது, பெரிய நெட்வொர்க் கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்க லாம் என்றே போலீஸார் விசா ரணையை முடுக்கி விட்டனர். ஆனால், இந்த கொள்ளையில் ஒரு யூடியூபரும், அவரது தோழி யுமான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியும் ஈடுபட்டது போலீ ஸாரை அதிர்ச்சியடைய வைத்தது.
அன்றாட வாழ்க்கையில் மிக சாதாரணமானவர்களாக வாழ்ந்த இவர்களால் எப்படி இந்த கார்ப்பரேட் நகைக்கடையில் அனைவர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு ரூ.21 கோடி நகைகளை கொள்ளையடிக்க முடிந்தது என்பது விசாரணை அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எந்த சோசியல் மீடியாவால் நெட்டிசன்கள் மத்தியில் இந்த ஜோடி பிரபலமானதோ, தற்போது அதே சோசியல் மீடியாவாலேயே போலீஸாரிடம் சிக்கி தங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்கின்றனர்.
தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே நிஷாந்த் - மீனாட்சியை பற்றியும், அவர்கள் இதற்கு முன் சோசியல் மீடியாவில் போட்ட வீடியோக்களையும் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
உளவியலாளர்கள், இவர்களைப் பற்றி கருத்துகளை சொல்லத் தொடங்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் குற்றவியல் விசாரணை சார்ந்த செய்தியாக மட்டுமல்லாமல், சமூக வலை தளங்களில் நாம் உருவாக்கிக் கொள்ளும் நம்பிக்கை குறித்தும் சிந்திக்க வைப்பதாக மதுரை கே.கே.நகரை சேர்ந்த மனநல ஆலோசகர் ப.ராஜசவுந்தரபாண்டியன் தெரிவிக்கிறார்.
அவர் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் பலரும் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களின் வீடியோக்களைத் தொடர்ந்து பார்க்கின்றனர்.
அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சி, சோகம் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள் வதால் பார்வை யாளர்களுக்கு அவர்களுடன் நெருக்கமான உறவு இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
மனநல ஆலோசகர் ப.ராஜசவுந்தரபாண்டியன்
சிலருடைய பதிவுகளின் கீழ், 'அண்ணா, நாங்கள் இருக்கி றோம்', 'அக்கா, உங்களை ரொம்பப் பிடிக்கும்' போன்ற கருத்துகளையும் பார்க்க முடிகிறது. ஆனால், சமூக வலை தளங்களில் ஒருவருடைய வாழ்க்கையைத் தொடர்ந்து பார்ப்பது, அவரைப் பற்றிய முழுமையான புரிதலை நமக்கு வழங்கி விடாது.
அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, எண்ணங்கள், உண்மையான குணம் ஆகியவை நமக்குத் தெரியாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒருவர் சமூக வலைதளங்களில் நல்ல கருத்துகளைப் பகிரலாம், மற்றவர்களுக்கு உதவலாம், விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
இதைப் பார்க்கும் பார்வையாளர்கள், அவர் வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களிலும் நல்லவராகத்தான் இருப்பார் என்று நினைக்கலாம். ஆனால், ஒருவருடைய சமூக வலைதளப் பேச்சும், அவருடைய உண்மையான செயல்பாடுகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இதன் அடிப்படையில் எல்லா யூடியூபர்கள், இன்புளுயன் சர்களையும் தவறானவர்கள் என்று கருத முடியாது. சமூக வலைதளங்கள் மூலம் பலரும் நல்ல தகவல்களையும், பயனுள்ள விழிப்புணர்வையும் வழங்கி வருகின்றனர். இருப்பினும், ஒருவருக்கு அதிகமான பாலோயர்ஸ் இருப்பது, அவர் கூறும் அனைத்தும் உண்மை என்பதற்கான ஆதாரமாகாது.
அவர்கள் குறிப்பிடும் கருத்துகள், பொருட்கள், பரிந்துரைகளில் அவசரப்பட்டு முடிவெடுக்காமல், உரிய விவரங்களைச் சரிபார்ப்பது அவசியம்.
ஒருவரைப் பின்தொடர்வது வேறு, அவரை முழுமையாக நம்புவது வேறு, சமூக வலைதளங்களில் நாம் பார்க்கும் பிம்பத்தையும், ஒருவருடைய உண்மையான குணத்தையும் வேறுபடுத்திப் பார்க்கக் கற்றுக்கொள்வதே இன்றைய டிஜிட்டல் காலத்தின் முக்கியமான உளவியல் விழிப்புணர்வாகும், என்றார்.
மீனாட்சியை பின்தொடர்வோர் அதிகரிப்பு
மதுரை நகைக்கடை கொள்ளை தொடர்பாக இன்புளுயன்சர் மீனாட்சி நாச்சியாரை கடந்த 15-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் செய்தி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சுமார் 1.54 லட்சமாக இருந்த அவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மீனாட்சி தனது இன்ஸ்டா பக்கத்தை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியுள்ளார். அப்போதிருந்து கடந்த 15-ம் தேதி வரை 1.54 லட்சமாக இருந்த பின்தொடர்வோர் எண்ணிக்கை, 3 நாட்களில் 2.08 லட்சமாக அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைதான மீனாட்சி, நிஷாந்த் யார் என்பதைத் தெரிந்துகொள்ளவும், அவரது பழைய வீடியோக்கள் மற்றும் பதிவுகளைப் பார்க்கவும் பலரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தேடிச் சென்றனர்.
இவ்வாறு சுயவிவரத்தைப் பார்வையிட்டவர்களில் பலர் அவரைப் பின்தொடரத் தொடங்கினர். இதனால் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இணைய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.