நவராத்திரி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: அனுமன் வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா

நவராத்திரி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: அனுமன் வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
Updated on: 
1 min read

திருமலை: திருப்​ப​தி​யில் நவராத்​திரி பிரம்​மோற்சவ விழா நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் இரவு மழையை​யும் பொருட்​படுத்​தாமல் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கருட சேவையை கண்டு களித்​தனர்.

இதனைத் தொடர்ந்​து, நவராத்​திரி பிரம்​மோற்​சவத்​தின் 6-ம் நாளான நேற்று காலை அனு​மன் வாக​னத்​தில் கோதண்​ட​ராமர் அலங்​காரத்​தில் உற்​சவ​ரான மலை​யப்​பர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

காலை 8 மணி முதல் 10 மணி வரை மாட வீதி​களில் வாகன சேவை சிறப்​பாக நடை​பெற்​றது. புரட்​டாசி மாதம் 5-வது சனிக்​கிழமை என்​ப​தா​லும், தசரா விடு​முறை என்​ப​தா​லும், வாரக்​கடைசி நாட்​கள் என்​ப​தா​லும் பக்​தர்​களின் கூட்​டம் அதி​க​மாக காணப்​பட்​டது. நேற்று மாலை புஷ்பக விமானத்​தில் ஸ்ரீ தே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பர் கிருஷ்ணர் அலங்​காரத்​திலும் இரவு யானை வாக​னத்​திலும் மாட வீதி​களில் எழுந்​தருளி​னார்.

நவராத்திரி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: அனுமன் வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
ஆந்திர உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கலில் வன்முறை: போலீஸார் துப்பாக்கிச் சூடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in