​காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா இன்று தொடங்குகிறது

மாங்​க​னித் திரு​விழா இன்று தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காரைக்​கால்​ அம்​மை​யார்​.

மாங்​க​னித் திரு​விழா இன்று தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காரைக்​கால்​ அம்​மை​யார்​.

Updated on
1 min read

காரைக்​கால்: காரைக்​காலில் ஆண்​டு​தோறும் நடத்​தப்​படும் காரைக்​கால் அம்​மை​யார் மாங்​க​னித் திரு​விழா இன்​று (ஜூன் 27) மாப்​பிள்ளை அழைப்பு வைபவத்​துடன் தொடங்​க​வுள்​ளது.

63 நாயன்​மார்​களில் சிறப்​பிடம் பெற்ற காரைக்​கால் அம்​மை​யாருக்கு காரைக்​காலில் தனிக் கோயில் உள்​ளது. இக்​கோயி​லில், அம்​மை​யார் வரலாற்றை நினை​வு​கூரும் வித​மாக ஆண்​டு​தோறும் மாங்​க​னித் திரு​விழா சிறப்​பான வகை​யில் நடத்​தப்​பட்டு வரு​கிறது. காரைக்​கால் கைலாச​நாத சுவாமி, நித்​யகல்​யாணப் பெரு​மாள் வகையறா தேவஸ்​தானம் சார்​பில் நடத்​தப்​படும் இவ்​விழா நிகழாண்டு இன்று மாலை பரமதத்​தர் அழைப்​பு (​மாப்​பிள்ளை அழைப்​பு) வைபவத்​துடன் தொடங்​கு​கிறது.

நாளை (ஜூன் 28) காலை பரமதத்​தர்- புனிதவ​தி​யார் திருக்​கல்​யாணம், அன்று மாலை பிச்​சாண்​ட​வர் வெள்​ளை​சாற்றி புறப்​பாடு, 29-ம் தேதி அதி​காலை பஞ்​சமூர்த்​தி​களுக்கு மகா அபிஷேகம், அன்று காலை பிச்​சாண்​ட​வர் பவழக்​கால் சப்​பரத்​தில் வீதி​யுலா (பக்​தர்​கள் மாங்​க​னிகளை வாரி இறைத்து வழிபடு​தல்), மாலை அமுது படையல், 30-ம் தேதி அம்​மை​யாருக்கு இறைவன் காட்​சிக் கொடுக்​கும் நிகழ்வு நடை​பெற உள்​ளது.

இதேபோல் ஜூலை 29-ம் தேதி விடை​யாற்றி உற்​சவம் நடை​பெறுகிறது. இதையொட்டி ஒரு மாத காலம், அம்​மை​யார் கோயில் மணிமண்​டபத்​தில் நாள்​தோறும் மாலை ஆன்​மிக சொற்​பொழி​வு​கள், இசை நிகழ்ச்​சிகள், பல்​வேறு கலைநிகழ்ச்​சிகள் நடை​பெறுகின்​றன. மாவட்ட நிர்​வாகம், காவல் துறை சார்​பில் பக்​தர்​களுக்கு தேவை​யான சுகா​தார வசதி, விரி​வான பாது​காப்பு நடவடிக்​கைகள் உள்​ளிட்ட ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

<div class="paragraphs"><p>மாங்​க​னித் திரு​விழா இன்று தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காரைக்​கால்​ அம்​மை​யார்​.</p></div>
“முட்டாள்தனமான விதிமீறல்!” - ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in