வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்

 வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

Updated on
1 min read

கடலூர்: வடலூரில் வள்​ளலார் நிறு​விய சத்​திய ஞான சபை​யில் 155-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெரு​விழா கொடியேற்​றம் நேற்று நடை​பெற்​றது. இதில் ஏராள​மான வள்​ளலார் பக்​தர்​கள் கலந்து கொண்​டனர். இன்று (பிப்​.1) ஜோதி தரிசனம் நடை​பெறுகிறது.

கடலூர் மாவட்​டம் வடலூரில் உள்ள சத்​திய ஞான சபை​யில் ஆண்​டு​தோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெரு​விழா விமரிசை​யாக நடை​பெறும். அதன்​படி, 155-வது ஆண்டு ஜோதி தரிசன விழாவையொட்டி நேற்று அதி​காலை 5 மணிக்கு அருட்​பெருஞ்​ஜோதி அகவல் பாராயணம் பாடப்​பட்​டது.

காலை 7.30 மணிக்கு தரும சாலை​யில் சன்​மார்க்​கக் கொடி ஏற்​றப்​பட்​டது. தொடர்ந்​து, வள்​ளலார் பிறந்த ஊரான மருதூர் வள்​ளலார் சந்​நி​தி​யில் கிராம மக்​களால் கொடியேற்​றப்​பட்​டது.

பின்​னர், பார்​வ​திபுரம் கிராம மக்​கள் பழங்​கள், சீர்​வரிசைப் பொருள்​களு​டன், வள்​ளலார் பயன்​படுத்​திய பொருள்​களை பல்​லக்​கில் வைத்​து, மேளதாளங்​கள் முழங்க ஊர்​வல​மாக சத்​திய ஞான சபை வளாகத்​துக்கு கொண்டு வந்​தனர்.

பின்​னர், சன்​மார்க்க அன்​பர்​கள் வள்​ளலாரின் பாடல்​களைப் பாடினர். காலை 10 மணி​யள​வில் சன்​மார்க்​கக் கொடியேற்​றம் நடை​பெற்​றது. இன்று காலை 6 மணிக்கு சத்​திய ஞானசபை​யில் முதல் ஜோதி தரிசனம் நடை​பெறும்.

தொடர்ந்​து, காலை 10 மணி, நண்​பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, நாளை (பிப்​.2) காலை 5.30 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடை​பெறும்.

வரும் 3-ம் தேதி மேட்​டுக்​குப்​பத்​தில் சித்​திவளாக திருஅறை தரிசனம் நடை​பெறும். கடலூர் எஸ்​.பி. ஜெயக்​கு​மார் தலை​மை​யில் 2 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

<div class="paragraphs"><p> வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.</p></div>
தென்பெண்ணை நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in