தென்பெண்ணை நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

தென்பெண்ணை நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தென்பெண்ணை ஆற்று நீர் விவகாரத்தில் நடுவர் மன்றத்தை அமைக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த ஆற்றின் நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். உரிய தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கவும், நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி. அஞ்சரியா அங்கே அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நாளை (பிப்.2) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 பிப்ரவரி 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in