கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்: வேளாங்கண்ணியில் சாம்பல் புதன் வழிபாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசிய அருட்தந்தை.

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசிய அருட்தந்தை.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: கிறிஸ்​தவர்​களின் தவக்காலம் நேற்று தொடங்கியதை யொட்டி, வேளாங்​கண்ணி பேரால​யத்​தில் சாம்​பல் புதன் சிறப்பு வழி​பாடு நடை​பெற்​றது.

இயேசு உயிர்த்​தெழுந்த தினத்தை கிறிஸ்​தவர்​கள் ஈஸ்​டர் பண்​டிகை​யாக கொண்​டாடி வரு​கின்​றனர். நடப்​பாண்டு ஈஸ்​டர் பண்​டிகை ஏப். 5-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது.

ஈஸ்​டர் பெரு​விழாவுக்கு முந்​தைய 40 நாட்​களை தவக்​கால​மாக கிறிஸ்​தவர்​கள் கடைபிடிக்​கின்​றனர். தவக்​காலத்​தின் முதல்​நாள் சாம்​பல் புதன்​கிழமை​யாக அனுசரிக்​கப்​படு​கிறது.

அந்த வகை​யில், நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள புகழ்​பெற்ற புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் நேற்று காலை சாம்​பல் புதன் சிறப்பு திருப்​பலி நடை​பெற்​றது.

இதில், ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கிறிஸ்​தவர்​கள் பங்​கேற்று பிரார்த்​தனை செய்​தனர். பின்​னர், கிறிஸ்​தவர்​களின் நெற்​றி​யில் பேராலய அதிபர் இருதய​ராஜ் மற்​றும் பங்​குத் தந்தை அற்​புத​ராஜ் உள்​ளிட்ட அருட்​தந்​தைகள் சாம்​பல் பூசி, நாற்​பது நாட்​கள் தவக்​காலத்தை தொடங்​கி​வைத்​தனர்.

<div class="paragraphs"><p>வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசிய அருட்தந்தை. </p></div>
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு 7.5% இடஒதுக்கீடு கிடைக்க யார் காரணம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in