மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு 7.5% இடஒதுக்கீடு கிடைக்க யார் காரணம்?

பேரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் கடும் விவாதம்
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு 7.5% இடஒதுக்கீடு கிடைக்க யார் காரணம்?
Updated on
2 min read

சென்னை: மருத்​து​வப் படிப்​பில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்​கீடு கிடைக்க யார் காரணம் என்​பது தொடர்​பாக அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் மற்​றும் அமைச்​சர்​களிடையே கடும் விவாதம் நடை​பெற்​றது.

சட்​டப்​பேர​வை​யில் 2026-27-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட் மீதான விவாதம் நேற்று தொடங்​கியது. அப்​போது, மருத்​து​வப் படிப்​பில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீத இடஒதுக்​கீடு கிடைக்க யார் காரணம் என்​பது குறித்து கார​சார விவாதம் நடை​பெற்​றது.

கே.பி.​முனு​சாமி (அதி​முக): தமிழகத்​தில் 75 ஆண்​டு​களில் வாங்​கிய மொத்த கடன் தொகை ரூ.5 லட்​சம் கோடி. ஆனால், கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.5.5 லட்​சம் கோடி கடன் வாங்​கி, நாட்​டிலேயே அதிக கடன் பெற்ற மாநில​மாக தமிழகம் உள்​ளது. இந்​நிலை​யில், இரட்டை இலக்க பொருளா​தார வளர்ச்சி அடைந்​திருப்​ப​தாக உண்​மைக்​குப் புறம்​பான தகவல் பட்​ஜெட்​டில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அமைச்​சர் தங்​கம் தென்​னரசு: 11.19 சதவீத பொருளா​தார வளர்ச்சி அடைந்​திருப்​ப​தாக மத்​திய அரசு​தான் அறி​வித்​துள்​ ளது. அதி​முக ஆட்​சி​யில் இந்த வளர்ச்சி ஏற்​பட​வில்​லை. மத்​திய அரசு தமிழகத்தை வஞ்​சித்து வரும் நிலை​யில், சாதனை இலக்கை அடைந்​திருக்​கிறோம். இது இறுதி அல்ல, மீண்​டும் நாங்​கள்​தான் வரு​வோம். மீண்​டும் ஆட்​சிக்கு வந்து பட்​ஜெட் சமர்ப்​பிப்​போம்.

கே.பி.​முனு​சாமி: மத்​திய அரசுடன் இணக்​க​மாக இருந்​து, தமிழகத்​துக்கு 11 மருத்​து​வக் கல்​லூரி​களை கொண்டு வந்​தோம். 11-ம் வகுப்பு மாணவர்​களுக்கு மடிக்​கணினி கொடுத்​தோம்.

ஆனால், தற்​போது திமுக அரசு வாக்​கு​களுக்​காக, கல்​லூரி முடிக்​கும் மாணவர்​களுக்கு மடிக்​கணினி கொடுக்​கிறது.அதி​முக அரசு மருத்​து​வப் படிப்​பில் 7.5 சதவீத இடஒதுக்​கீட்டை கொண்டு வந்​த​தால், மருத்​து​வக் கல்லூரி​களில் ஏழை அரசுப் பள்ளி மாணவர்​கள் சேர முடிகிறது.

அமைச்​சர் தங்​கம் தென்​னரசு: முதல்​வர் ஸ்டா​லின் காலை உணவுத் திட்​டத்தை கொண்டு வந்​தார். இதில் பயனடை​யும் மாணவர்​கள் 2026 மட்​டுமல்ல, 2031 தேர்​தலிலும் வாக்​களிக்​கப் போவ​தில்​லை.

அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன்: மாவட்​டத்​துக்கு ஒரு மருத்​து​வக் கல்​லூரி என்ற கருத்​துருவை மத்​திய அரசுக்கு அனுப்​பியதே 2011-ல் முதல்​வ​ராக இருந்த கருணாநி​தி​தான். மருத்​து​வப் படிப்​பில் 7.5% இடஒதுக்​கீடு சட்​டத்தை அதி​முக அரசு இயற்​றி​னாலும், அது ஆளுநர் மேஜை​யில் உறங்​கிக்​கொண்​டிருந்​தது. எங்​கள் போராட்​டத்​தால்​தான் அதற்கு செயல் வடிவம் கிடைத்​தது.

எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி: உண்​மைக்கு புறம்​பான கருத்தை அமைச்​சர் தெரிவிக்​கிறார். சட்​டப்​பிரிவு 162-ஐ பயன்​படுத்தி 7.5 சதவீத இடஒதுக்​கீட்டை கொண்டு வந்​தது அதி​முக அரசு​தான். அரசு மாறும்​போது, திட்​டத்தை தொடர்​வது வழக்​க​மானது.

அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன்: பின்​னர் ஏன் திமுக அரசு கொண்​டு​வந்த மதுர​வாயல்​-சென்னை துறை​முகச் சாலை திட்​டத்தை முடக்​கினீர்​கள்? சட்​டப் பேர​வைக்​காக கட்​டப்​பட்ட கட்​டிடத்தை ஓமந்​தூ​ரார் மருத்​து​வ​மனை​யாக ஏன் மாற்​றினீர்​கள்? அந்த திட்​டங்​களை தொடர வேண்​டியது தானே?

பழனி​சாமி: ஆற்​றில் தூண்​கள் கட்​டு​வ​தால், வெள்​ளப் பாதிப்பு ஏற்​படும். எனவே, திட்ட வடிவ​மைப்​பைத்​தான் மாற்​றச் சொன்​னோம். திட்​டத்தை முடக்க​வில்​லை.

அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன்: 2011-ல் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​ட​போது, ஏராள​மான வண்​ணத் தொலைக்​காட்​சிகளை மக்​களுக்கு வழங்​காமல், பூட்​டி​வைத்​துப் பாழாக்​கினீர்​களே?

எஸ்​.பி.வேலுமணி (அதிமுக): தாலிக்​குத் தங்​கம், அம்மா பரிசுப் பெட்​டகம், மினி கிளினிக், அம்மா உணவகம் திட்​டங்​களை திமுக அரசு முடக்​கியது.

அமைச்​சர் தா.மோ.அன்​பரசன்: தங்​கம் விலை உயர்ந்​த​ போது, தாலிக்கு தங்​கம் திட்​டத்​துக்​காக அளித்த 3.5 லட்​சம் விண்​ணப்​பங்​களை கிடப்​பில் போட்​ட​வர்​கள்​தானே நீங்​கள்?

அமைச்​சர் கே.என்​.நேரு: அம்மா உணவகத்தை நாங்​கள் முடக்​க​வில்​லை. உங்​கள் ஆட்​சி​யை​விட சிறப்​பாக அம்மா உணவகங்​களை நடத்தி வரு​கிறோம்.

அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு: அம்மா உணவகப் பெயர் பலகையை சேதப்​படுத்​திய திமுகவைச் சேர்ந்த நபர் மீது வழக்கு தொடர்ந்​து, புனரமைப்​புக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்​கியது திமுக ஆட்​சி.

எஸ்​.பி.வேலுமணி: அம்மா உணவக மேம்​பாட்​டுக்கு பழனி​சாமி ரூ.100 கோடி ஒதுக்​கி​னார். இவ்​வாறு விவாதம் நடைபெற்றது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு 7.5% இடஒதுக்கீடு கிடைக்க யார் காரணம்?
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 பிப்ரவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in