

திருமலை: தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அன்று காலை, ஏழுமலையான் கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதன் பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
17ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டும் 19ம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டும் 16 மற்றும் 18ம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசன கடிதங்கள் பெறப்படமாட்டாது. மேலும், சில ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.