ஈரான் போர்க் கப்பல் மூழ்கியபோது மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை

ஈரான் போர்க் கப்பல் மூழ்கியபோது மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி அதிகாலை ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்து அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இலங்கையின் காலே பகுதியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. இது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்புப் பணியில் களமிறங்கினோம். ஐஎன்எஸ் தரங்கிணி கப்பல் சம்பவ பகுதிக்கு அனுப்பப்பட்டது. கொச்சியில் இருந்து ஐஎன்எஸ் இக்சாக் கப்பலும் சம்பவ பகுதிக்கு சென்றது.

இலங்கை கடற்படையோடு இணைந்து இந்திய கடற்படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டது. இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று உயிர் காக்கும் ஜாக்கெட்டுகளை வீசியது. இலங்கையோடு இணைந்து தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

ஈரான் போர்க் கப்பல் மூழ்கியபோது மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை
ஈரான் போர் விளைவுகள்... சீனாவுக்கு இழப்பா, ஆதாயமா? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in