Last Updated : 30 Oct, 2017 02:21 PM

 

Published : 30 Oct 2017 02:21 PM
Last Updated : 30 Oct 2017 02:21 PM

நாளை உத்தான ஏகாதசி... விரதம் இருந்தால் புண்ணியம்!

மாதந்தோறும் வரும் ஏகாதசி விசேஷம். இந்த ஏகாதசி நாளில் மறக்காமல் விரதமிருந்து பெருமாளை ஸேவிப்பார்கள் பக்தர்கள். இவற்றில் வருடத்தில்... மூன்று ஏகாதசிகள் முக்கியத் துவம் வாய்ந்தவை என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

கைசிக ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான நாட்கள் என்று போற்றப்படுகின்றன. நாளைய தினம் செவ்வாய்க்கிழமை 31.10.17 செவ்வாய்க்கிழமை, உத்தான ஏகாதசி. விரதம் இருந்து, மகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மகோன்னதமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

நாளைய தினம்... உத்தான ஏகாதசி விரதம் இருப்பது, வீட்டின் தரித்திர நிலையை மாற்றிவிடும். வீட்டில் சுபிட்சம் நிலவும். கூடுமானவரை, விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம். இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. மாலையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். எல்லா சத்விஷயங்களும் உங்களைத் தேடி வரும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மிக முக்கியமாக, நாளைய உத்தான ஏகாதசி நாளில், துளசி தீர்த்தத்தைப் பருகினால், அத்தனைப் புண்ணியங்கள் கொண்டது என்கிறது சாஸ்திரம். ஆகவே, உத்தான ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளுங்கள். இயலாதவர்கள் மறக்காமல் துளசித் தீர்த்தம் பருகுங்கள். சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி என்கிறார் பாலாஜி வாத்தியார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x