Published : 05 Jun 2014 06:48 PM
Last Updated : 05 Jun 2014 06:48 PM

வார ராசி பலன் 5-6-2014 முதல் 11-6-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 9-ல் குரு உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்பு கூடிவரும். பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். 12-ல் செவ்வாய் இருப்பதால் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். ஜன்ம ராசியில் வக்கிரச் சனியும், ராகுவும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும்.

அதிகம் உழைக்க வேண்டிவரும். 7-ல் சுக்கிரனும் கேதுவும் இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. 8-ல் சூரியனும் வக்கிர புதனும் உலவுவதால் உஷ்ணாதிக்கம் கூடும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். வியாபாரிகள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 5 (முற்பகல்), 9, 11. | திசை: வடகிழக்கு.

நிறங்கள்: மஞ்சள், பொன் நிறம். | எண்: 3.

பரிகாரம்: சுமங்கலி பிரார்த்தனை செய்வது நல்லது. பிறரிடம் கோபப்படாமல் அன்புடன் பேசிப் பழகுவது அவசியமாகும்.



விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாய் இருப்பார்கள். நிலபுலங்கள் சேரும். சிவப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் வார முன்பகுதியில் கிடைக்கும்.

6-ல் சுக்கிரனும் கேதுவும் 7-ல் சூரியனும் வக்கிரப் புதனும் இருப்பதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் சோதனைகள் சூழும். குரு 8-ல் இருப்பதால் மக்களால் பிரச்னைகள் சூழும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 5 (முற்பகல்), 8, 11. | திசைகள்: வடமேற்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, மெரூன், சிவப்பு. | எண்கள்: 7, 9.

பரிகாரம்: குரு, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். லட்சுமி அஷ்டகம் சொல்லவும்.



தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாயும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும் . வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு உருவாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆதரவு கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 9. | திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம். | எண்கள்: 1, 3, 4, 6, 9.

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்யவும். திருமாலை வழிபடவும்.



மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ அடிகோலப்படும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள், கறுப்பு நிறப்பொருட்கள், கச்சாப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதியவர்களது தொடர்பால் அனுகூலம் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும்.

குரு பலம் இல்லாததால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தாமதமும் உண்டாகும். பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் தொழில் ரீதியாக நல்லதொரு தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 9, 11. | திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, கறுப்பு. | எண்கள்: 4, 6.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.



கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், கேதுவும், 5-ல் குருவும் உலவுவதால் கணவன் மனைவி உறவு நிலை சீராகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்களும் தொழில் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவுவார்கள். பண வரவு திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். மக்களால் அனுகூலம் உண்டாகும்.

8-ல் செவ்வாய் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. 9-ல் வக்கிரச் சனியும் ராகுவும் உலவுவதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும். புதன் வக்கிரமாக இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 5 (முற்பகல்), 9, 11. | திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், இளநீலம், வெண்மை. | எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.



மீன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் இருப்பதால் எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வழக்கு விசாரணைகளில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். தந்தையால் நலம் உண்டாகும். முதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

வாரப் பின்பகுதியில் சந்திரன் 8-ம் இடம் மாறி, வக்கிரச் சனியுடனும் ராகுவுடனும் கூடுவதால் மன அமைதி குறையும். பயணத்தால் சிறு சங்கடம் உண்டாகும். கெட்டவர்களுடன் தொடர்பு கூடாது. மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்துவது அவசியமாகும். விவசாயிகள், சுரங்கப் பணியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 5 (முற்பகல்), 8. | திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.. | எண்கள்: 1, 6.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் தரும். துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x