Last Updated : 24 Feb, 2021 10:02 AM

 

Published : 24 Feb 2021 10:02 AM
Last Updated : 24 Feb 2021 10:02 AM

மாசி பிரதோஷம்; புத வார பிரதோஷம்; நினைத்ததெல்லாம் கைகூடும்! 


புத வாரம் என்று சொல்லப்படுகிற புதன்கிழமையில் வந்துள்ள பிரதோஷத்தின் போது, அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவரையும் சிவலிங்கத் திருமேனியையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், நினைத்த காரியமெல்லாம் கைகூடும். வாழ்வில் சகல வளமும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.

வழிபாடுகளில், சிவ வழிபாடு உள்ளும்புறமுமாக தெளிவையும் ஞானத்தையும் கொடுக்கக் கூடியது என்பார்கள். சிவ வழிபாடு செய்வதற்கு, மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷம். அதேபோல், மாதாமாதம் வருகிற சிவராத்திரி நன்னாள், சிவபெருமானை விரதம் இருந்து தரிசிப்பதும் பூஜிப்பதும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், திரயோதசி திதி என்பது பிரதோஷ தினமாக, பிரதோஷ வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை என்று சொல்லப்படுகிற சோமவாரத்தில் வருகிற பிரதோஷம், சுபிட்சத்தையும் முக்தியையும் கொடுக்கும். செவ்வாய்க்கிழமை என்று சொல்லப்படுகிற மங்கலவாரத்தில் வருகிற பிரதோஷத்தன்று சிவ பூஜை செய்தும் சிவனாரை தரிசித்தும் வேண்டிக்கொண்டால், வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடைபெறும்.

வியாழக்கிழமை என்று சொல்லப்படும் குருவார நன்னாளில் வருகிற பிரதோஷம், ஞானத்தையும் யோகத்தையும் தரும். வெள்ளிக்கிழமை என்று சொல்லப்படும் சுக்கிர வாரத்தில் வருகிற பிரதோஷமும் தரிசனமும் பிரார்த்தனையும் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம். சனிக்கிழமை பிரதோஷமும் தரிசனமும் சர்வ பாபங்களையும் போக்கி அருளும். ஞாயிற்றுக்கிழமை வருகிற பிரதோஷ தரிசனம், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

புத வாரம் என்று சொல்லப்படும் புதன் கிழமையன்று வருகிற பிரதோஷத்தின் போது செய்யப்படுகிற தரிசனம், புத்தியைத் தெளிவாக்கும். ஞானத்தைக் கொடுக்கும். இன்று 24ம் தேதி பிரதோஷம். புத வார பிரதோஷம். மாலையில் சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள். சிந்தையில் தெளிவையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் தந்தருளும்.

கூடுதலாக... மாசி பிரதோஷம் விசேஷம். மாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம்தான். அற்புதமான இந்த மாசி மாதத்தில் புதன் கிழமையில் வருகிற பிரதோஷத்தில், சிவ தரிசனம் செய்வோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x