வெள்ளி பிரதோஷம்; வீட்டில் இருந்தே தரிசிக்கலாம்! திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் நேரலை ஏற்பாடு

வெள்ளி பிரதோஷம்; வீட்டில் இருந்தே தரிசிக்கலாம்! திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் நேரலை ஏற்பாடு
Updated on
1 min read

வெள்ளி பிரதோஷ பூஜையை, வீட்டில் இருந்தே தரிசிப்பதற்கு ஏதுவாக, சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் நிர்வாகம் நேரலையில் ஒளிபரப்புகிறது. இன்று 27ம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை கண்குளிர தரிசியுங்கள்.

சிவ பூஜைகளில் மிக முக்கியமான பூஜை பிரதோஷ பூஜை. சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன்' மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பி வருகிறது கோயில் நிர்வாகம்.


பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 27.11.2020 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேக வைபவமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமியின் பேரருளைப் பெறலாம். .

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும்.

இந்தத் தகவலினை தங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் கண்டு இறைவனின் பேரருளைப் பெறுங்கள் என திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in