Published : 02 Jul 2020 14:34 pm

Updated : 02 Jul 2020 14:40 pm

 

Published : 02 Jul 2020 02:34 PM
Last Updated : 02 Jul 2020 02:40 PM

வீட்டிலிருந்தே குரு வார வளர்பிறை பிரதோஷ தரிசனம்;  திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் நேரலை ஏற்பாடு

tiruvotriyur-koil

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், வளர்பிறையில் வரும் பிரதோஷ பூஜையை, வீட்டிலிருந்தே நேரலையில் தரிசிக்க, பல ஆலயங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இன்று வளர்பிறை குருவார பிரதோஷம். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் நிர்வாகம் பிரதோஷ பூஜையை வீட்டில் இருந்தபடியே, கண்ணாரத் தரிசியுங்கள்.

ஏற்கெனவே, கடந்த மே 5ம் தேதி தொடங்கி, ஒவ்வொரு பிரதோஷ பூஜையையும் வீட்டில் இருந்துகொண்டே நேரலையில் தரிசிக்க சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் நிர்வாகம் தொடர்ந்து ஒளிபரப்பு செய்தது. இந்த ‘ஆன்லைன்’ பிரதோஷ பூஜை ஒளிபரப்பை, ஏராளமான பக்தர்கள் தரிசித்துச் சிலிர்த்தார்கள்.
இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறையும் பக்தர்கள் இந்தத் தகவலை அறிந்து, பிரதோஷ நாளில் தியாகராஜப் பெருமானை தரிசிப்பது கூடிக்கொண்டே இருக்கிறது.


இன்று (02.07.2020) ஆனி மாதப் பிரதோஷம். வளர்பிறையில் வரக்கூடிய பிரதோஷம். குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷம் இன்று. இந்தநாளில், அதாவது குரு பிரதோஷ நாளில், வளர்பிறை பிரதோஷ பூஜையைத் தரிசிப்பது கூடுதல் பலன்களைத் தரக்கூடியது. மகோன்னதமான பிரதோஷ பூஜையை தவறவிடாமல் தரிசனம் செய்யுங்கள்.


தென்னாடுடைய சிவனின் பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், இன்று 02.07.2020 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தையும் அதனைத் தொடர்ந்து பிரதோஷ நாயகருக்கு நடத்தப்படும் அபிஷேகத்தையும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதை கண் குளிரத் தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

இந்த பிரதோஷ பூஜையைத் தரிசித்து அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை திரிபுர சுந்தரி அம்பாளின் அருளைப் பெறுங்கள். உங்களின் நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் இறைவனை கண் குளிரத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும். இந்த தகவலை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் கண்டு சிவனாரின் அருளைப் பெறுங்கள் என திருவொற்றியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தென்னடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

வீட்டிலிருந்தே குரு வார வளர்பிறை பிரதோஷ தரிசனம்;  திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் நேரலை ஏற்பாடுதிருவொற்றியூர் தியாகராஜ சுவாமிதிருவொற்றியூர் கோயில்நேரலையில் பிரதோஷம்பிரதோஷம்திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author