Published : 05 Jun 2020 06:49 AM
Last Updated : 05 Jun 2020 06:49 AM
மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும்.
ரிஷபம்: நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வேற்றுமொழி பேசுபவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
மிதுனம்: அரசால் அனுகூலம் உண்டு. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
கடகம்: விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பீர்கள். குலதெய்வ கோயிலைப் புதுப்பிக்க முயற்சி மேற்கொள்வீர்கள்.
சிம்மம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். குழப்பமான விஷயங்களில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வீடு வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும்.
கன்னி: வழக்கில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். விஐபி.கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
துலாம்: பணவரவு திருப்தி தரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும்.
விருச்சிகம்: முன்கோபம் அடிக்கடி தலைதூக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். யாருக்கும் சாட்சி, உத்தரவாத கையெழுத்து போட வேண்டாம்.
தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். தூக்கமின்றி தவிப்பீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
மகரம்: புகழ், கவுரவம் உயரும். பெரிய நிறுவனத்தில் வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. பங்கு வர்த்தகம் லாபம் தரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
கும்பம்: புது பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகோதரர்களால் இருந்துவந்த அலைச்சல்கள் நீங்கும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.
மீனம்: நிர்வாகத் திறன் கூடும். முக்கிய முடிவுகளை தள்ளிப் போடாமல் உடனடியாக எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT