Last Updated : 26 Apr, 2020 12:22 PM

 

Published : 26 Apr 2020 12:22 PM
Last Updated : 26 Apr 2020 12:22 PM

கடன் பிரச்சினை தீர்க்கும் அட்சய திருதியை! 

அட்சய திருதியை நாளில், நெல், கோதுமை, அரிசி, தங்கம், பசு, பானகம், தண்ணீர், நீர் மோர், குடை, விசிறி, போர்வை, ஆடை என தானம் தரச் சொல்லி வலியுறுத்துகிறது பவிஷ்ய புராணம். இந்தநாளில், இந்தப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை தானமாகக் கொடுத்தாலும் அது பன்மடங்கு பலன்களையும் புண்ணியங்களையும் தந்தருளும்.
தண்ணீர் நிரம்பிய குடம் தானம் செய்வதும் மகா புண்ணியம். அட்சய திருதியை நாளில், பித்ருக்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து, வணங்கி பிரார்த்தனை செய்யச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். தண்ணீர்க்குட தானத்தை, ‘தர்மகடம்’ எனப் போற்றுகிறது சாஸ்திரம்.


அட்சய திருதியை எனும் அற்புத நாளில், காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். ’வஸந்த் மாதவாயை நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்கள் செய்யலாம். கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் பாயசம் செய்து நைவேத்தியம் பண்ணி, விநியோகிக்கலாம்.


அட்சய திருதியை நன்னாளில், மகாலக்ஷ்மித் தாயாரின் திருநாமங்களைச் சொல்லி பாராயணம் செய்வதும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தையும் செல்வத்தையும் சேர்க்கும்.


அட்சய திருதியை எனும் புண்ணிய நாளில், ஆதிசங்கரை பூஜிப்பதும் அவர் நமக்கு அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை ஜபிப்பதும் மகா புண்ணியம். செல்வச் செழிப்புடன், கடன் தொல்லைகளில்லாமல் வாழலாம்.


இன்று 26.4.2020 அட்சய திருதியை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x