Published : 29 May 2014 10:21 AM
Last Updated : 29 May 2014 10:21 AM

சமவசரணம்

சமண தீர்த்தங்கரர்கள் முற்றுமுணர்ந்த நிலையை அடைந்த பிறகு அவர்கள் எல்லாவுயிர்களுக்கும் அற வாழ்க்கையைப் பற்றி போதிக்கும் இடந்தான் சமவசரணம் எனப்படும். சமவசரணம் வட்ட வடிவமான மண்டபம். நான்கு பக்கமும் வாயில்களுடையது.

சமவசரணம் நான்கு அடுக்காக மூன்று மதில்கள், ஏழு பிரகாரங்கள் கொண்டிருக்கும்.. வாயில்கள் முன் நீண்ட நெடிய அழகிய மானஸ்தம்பங்கள் இருக்கும். இந்த மானஸ்தம்பத்தைப் பார்க்கும்போதே தான் எனும் அகந்தை ஒழியும். இந்நான்கு அடுக்குகளையும் கடந்து உள்ளே சென்றால் திரிமேகலா எனும் இடமிருக்கும். அதன் மேல் கந்தக்குடி எனும் மேடையும் அதன் மீது அரியணையும் இருக்கும். இந்த அரியணை மீது ஆயிரமிதழ்களைக்கொண்ட தாமரை மலர் இருக்கும். இம்மலரின்மீது நான்கு விரல்கள் உயரத்தில் தீர்த்தங்கர பகவான் வீற்றிருப்பார். அவர் தலையின் பின்புறம் ஒளிவட்டமும் தழைத்துப் பரவிய அசோக மரமும் இருக்கும். இம்மண்டபம் தற்போதைய அளவுப்படி பன்னிரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்புக் கொண்டது. இதன் முதல் அடுக்கில் கணதரர், முனிவர்கள், தேவ தேவதையர் இருப்பர். இரண்டாவது அடுக்கில் அரசர்களும் மக்களுமிருப்பர். மூன்றாவது அடுக்கில் மிருகங்களும் ஏனைய உயிரினங்களும் இருந்து பகவாவனின் அறவுரையைக் கேட்டுப் பலன் பெறுவர்.

பகவான் சமவசரணத்தில் அறவுரை ஆற்றுவார். அவரிடமிருந்து வரும் ஒலி திவ்யத் தொனி எனப்படும். அனைவரும் அவரவர் மொழியிலேயே திவ்யத் தொனியான அறவுரையை அறிவர். இந்நிகழ்ச்சி நடைபெறும்போது மலர்கள் பருவ மாற்றமின்றி மலரும். அனைவரும் நட்புடன் இருப்பர். நாட்டிலுள்ள மக்களின் உடல் குறைபாடுகள் நீங்கும். இருக்குமிடங்கள் பளிங்கு போல் இருக்கும் குளிர்ச்சியான மணமான தென்றல் வீசும்.மேகம் சாரலைப் பொழியும். தானியங்கள் பெருகும் அனைவரும் மனம், மொழி, உடலால் துதிப்பர். எங்கும் எண்வகை மங்களங்கள் நிறையும். திசை நான்கும், இரத்தின தருமச்சக்கரங்கள் இருக்கும்.

இந்த சமவசரணத்தின் மாதிரிகளை அனைத்து சமணக் கோயில்களிலும் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x