Published : 29 May 2014 19:25 pm

Updated : 29 May 2014 19:25 pm

 

Published : 29 May 2014 07:25 PM
Last Updated : 29 May 2014 07:25 PM

வார ராசி பலன் 29-05-14 முதல் 04-06-14 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

29-05-14-04-06-14

மேஷம்

செவ்வாய் 6-ல் உலவுவது விசேஷமாகும். ஜன்ம ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் உலவுவதும் அனுகூலமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பெண்களால் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். உற்றார்-உறவினர்களது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலம் உண்டாகும். இயந்திரப்பணியாளர்களுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும்.


ஜலப்பொருட்களால் வருமானம் கிடைக்கும். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்பு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1, 2, 4 | திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, சிவப்பு | எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: விநாயகருக்கும் துர்க்கைக்கும் உரிய சுலோகங்களைச் சொல்லி வழிபடுவது நல்லது.ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் ராகுவும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை வெளிப்படும். முகப்பொலிவு கூடும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

சிந்தனையில் தெளிவு பிறக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். போக்குவரத்து இனங் களால் ஆதாயம் கிடைக்கும். பெண்களால் நலம் உண்டாகும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பேச்சின் மூலம் ஜீவனம் செய்பவர்களுக்கு அனுகூலமான போக்கு இருந்துவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1, 2, 4 | திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், புகை நிறம், வெண்மை, இளநீலம் | எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: சுப்பிரமணியருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடவும். திருமாலுக்குத் துளசி மாலை அணிவித்து வழிபடவும்.மிதுனம்

உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நிலை உயரும். சாதுக்கள், மகான்கள் ஆகியோரது ஆசிகள் கிடைக்கும். இடமாற்றம், நிலைமாற்றம் உண்டாகும். மக்களால் ஓரளவு நலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் ஆதாயம் கிடைக்கும். வார முன்பகுதியில் செலவுகள் சற்று கூடும் என்றாலும் வாரப் பின்பகுதியில் பொருள்வரவு அதிகரிக்கும்.

நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு கூடிவரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். 4-ல் செவ்வாயும் 12-ல் சூரியனும் இருப்பதால் பெற்றோர் நலனில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30 (பிற்பகல்), ஜூன் 1, 2, 4 | திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன் | எண்கள்: 6, 7.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது நல்லது.கடகம்

செவ்வாய் 3-லும் 10-ல் கேதுவும், 11-ல் சூரியன், புதனும் உலவுவதால் உங்கள் திட, வீர, பராக்கிரமம் வெளிப்படும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். அரசுப் பணிகள் இனிதே நிறைவேறும். நிர்வாக ஆற்ற லால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். செயலில் வேகம் கூடும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

சுப காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், வெடிப் பொருட்கள், மின்சாதனங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தான, தர்மப்பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். வாரப் பின்பகுதியில் உங்கள் மதிப்பு உயரும். மற்றையோர் உங்களைப் பாராட்டுவார்கள். ஜலப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். எழுத்து தொடர்பானவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 2, 4 | திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு | எண்கள்: 1, 5, 7, 9.

பரிகாரம்: குருப் பிரீதி செய்வது அவசியமாகும். துர்கை அம்மனை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.சிம்மம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பொருளாதார நிலையில் விசேஷமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மக்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும்.

சகோதர, சகோதரிகளால் நலம் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பொன்னும், பொருளும் சேரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் கைகூடும். நல்ல மாற்றங்கள் நிகழும். சுப காரியச் செலவுகள் சற்று கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1, 4 | திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, புகை நிறம், பச்சை, இளநீலம் | எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: பராசக்தியை வழிபடவும். பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிக்கவும்.கன்னி

கோசாரப்படி சுக்கிரன் 8-ல் உலவுவது சிறப்பாகும். என்றாலும் அவரும் கேதுவுடன் கூடியிருப்பது குறை. சந்திரன் 9, 10, 11-வது இடங்களில் உலவுவதால் அள வோடு நலம் உண்டாகும். பெற்றோரால் ஓரிரு நன்மைகள் ஏற்படும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள்.

பணவரவு சற்று அதிகரிக்கும். ஜன்ம ராசியில் செவ்வாயும், 2-ல் வக்கிர சனியும் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். குடும்பத்தார்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகவும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் பாதுகாப்பு தேவை. யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1, 2 | திசை: தென்கிழக்கு.

நிறம்: வெண்மை, இளநீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது. வயதானவர்களுக்கு உதவி செய்யவும்.துலாம்

உங்கள் ராசிக்கு 9-ல் குரு அமர்ந்து ஜன்ம ராசியையும், 3, 5-ம் இடங்களையும் பார்ப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முயற்சி கைகூடும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அளவோடு அனுகூலம் உண்டாகும். தனவந்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். சாதுக்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் ஆகியோரது தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பணப்புழக்கம் சீராக இருந்துவரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும். விட்டுக் கொடுப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. வாரப் பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு வரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30 (பிற்பகல்), ஜூன் 1, 2, 4 | திசை: வடகிழக்கு.

நிறங்கள்: மஞ்சள், பொன் நிறம் | எண்: 3.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும். சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கவும்.விருச்சிகம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். செந்நிறப்பொருட்கள் லாபம் கொண்டு வரும். 6-ல் சுக்கிரனும் 7-ல் சூரியனும் வக்கிர புதனும் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரால் சங்கடம் உண்டாகும்.

கூட்டாளிகள் ஒத்துழைக்க மாட்டார்கள். குரு 8-ல் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கை தேவை. 12-ல் ராகு இருப்பதால் பயணத்தின்போது விழிப்புத் தேவை. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலை தூரத்தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 4 | திசைகள்: வடமேற்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, மெரூன், சிவப்பு | எண்கள்: 7, 9.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியையும் துர்க்கையையும் வழி படவும். ஏழைப் பெண்களுக்கும் வேதவிற்பன்னர்களுக்கும் உதவி செய்யவும்.தனுசு

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாயும், 11-ல் சனி, ராகுவும் உலவுவதால் எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். மன உற்சாகம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். அரசுப்பணியாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1 (பகல்), 4 (பிற்பகல்).

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம் | எண்கள்: 7-ஐத் தவிர இதர எண்கள்.

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்யவும். கணபதி மூல மந்திரத்தைக் குருமுகமாக உபதேசம் பெற்றுச் சொல்லவும்.மகரம்

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் சுகம் கூடும். நல்லவர்களின் தொடர்பால் நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களிலும், விருந்து, உபசாரங்களிலும் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாத தால் மக்களால் பிரச்னைகள் சூழும்.

ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் முன்னேற்றம் தடைபடும். ஆன்மிகவாதிகள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. பெற்றோர் நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும். மாணவர்கள் படிப்பில் அதிகம் அக்கறை செலுத்துவது அவசியமாகும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதி: மே 30, ஜூன் 1, 2 | திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, கறுப்பு | எண்கள்: 4, 6.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் சேர்க்கும்.கும்பம்

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், கேதுவும், 5-ல் குருவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு கூடும். தியானம், யோகா ஆகியவற்றில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும்.

மருத்துவர்கள் நற்பெயருக்கு உரியவர்கள் ஆவார்கள். மகப்பேறு பாக்கியம் கிட்டும். மக்க ளால் அனுகூலம் ஏற்படும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். 4-ல் சூரியனும் வக்கிர புதனும் 8-ல் செவ்வாயும் உலவுவதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1, 2, 4 | திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், இளநீலம், வெண்மை | எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: சுப்பிரமணிய புஜங்கம் படிப்பதும் கேட்பதும் நல்லது. முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். இளைஞர்களுக்கு உதவவும்.மீனம்

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் உலவு வதால் பொருள் வரவு சற்று அதிகரிக்கும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். எதிர்ப்புக்கள் குறையும். மேலதிகாரிகளின் பாராட்டு களைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். நல்லவர்களின் தொடர்பு கிட்டும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். மக்களால் ஓரளவு நலம் உண்டாகும்.

பெண்களால் அனுகூலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வாரப் பின்பகுதியில் ஓர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும். 2-ல் கேதுவும், 7-ல் செவ்வாயும், 8 -ல் வக்கிர சனியும் ராகுவும் உலவுவதால் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பேச்சி லும் செயலிலும் நிதானம் தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1, 2, 4 | திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, ஆரஞ்சு | எண்கள்: 1, 6.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். ஏழை களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும்.


வார ராசிபலன்ராசி பலன்சந்திரசேகரபாரதி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x