Published : 06 Apr 2014 12:00 AM
Last Updated : 06 Apr 2014 12:41 PM
பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் அவரது குடும்ப உறுப் பினர்களின் சொத்து மதிப்பு ரூ.7 கோடி என்று வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 மக்களவைத் தேர்தலின் போது அத்வானியின் சொத்து மதிப்பு ரூ.3.5 கோடியாக இருந்தது. தற்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.7 கோடியாக அதிகரித்துள்ளது.
குர்காவ்ன், காந்திநகரில் அத்வானிக்கு 2 வீடுகள் உள்ளன. இரண்டு வீடுகளின் மதிப்பு ரூ.5.57 கோடி ஆகும். 2009-ல் அவற்றின் மதிப்பு ரூ.2.35 கோடியாக மட்டுமே இருந்தது.
மேலும் குர்காவ்ன் நகரில் ரூ.2.27 மற்றும் ரூ.2.29 கோடி மதிப்பில் அத்வானிக்கு இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. மேலும் செக்டர் 2-ல் ரூ.1 கோடி மதிப்பில் மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது.
அத்வானி வங்கிக் கணக்கில் ரூ.97.23 லட்சமும் அவரது மனைவி யின் வங்கிக் கணக்கில் ரூ.67.13 லட்சமும் உள்ளது. அவருக்கும் அவரது மனைவிக்கும் சேர்த்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன. அவரது கையிருப்பில் ரூ.25,000-ம் மனைவி கையிருப்பில் ரூ.15,000-ம் உள்ளது. வேறு எந்த கடனும் இல்லை. சொந்தமாக மோட்டார் வாகனங்கள் இல்லை.
1992 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பன உள்ளிட்ட தகவல்கள் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.