Published : 13 Jan 2015 08:27 am

Updated : 13 Jan 2015 08:27 am

 

Published : 13 Jan 2015 08:27 AM
Last Updated : 13 Jan 2015 08:27 AM

இலங்கையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.

கடந்த 8-ம் தேதி இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். அன்றைய தினம் மாலை அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அதே விழாவில் நாட்டின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இலங்கையின் புதிய அரசில் 45 அமைச்சர்கள் நேற்று நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் 27 பேர் கேபினட் அமைச்சர்கள், 8 இணை அமைச்சர்கள், 10 துணை அமைச்சர்கள். கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் நேற்று அவர்கள் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

வெளியுறவு அமைச்சர் சமரவீரா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கொள்கை அமலாக்கப் பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ரணில் கட்சியின் மூத்த தலைவர் ரவி கருணாநாயகே நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்ட மங்கள சமரவீரா வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட தமிழர்களும் கேபினட் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.

அதிபர் அறிவுரை

பதவியேற்பு விழாவில் அதிபர் சிறிசேனா பேசியபோது, நாம் நாடின் மன்னர்கள் அல்ல, மக்களின் சேவகர்கள், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்து சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அமைச்சர்களின் விவரம் வருமாறு:

ரணில் விக்ரமசிங்க - பிரதமர், கொள்கை வகுப்பு, பொருளாதார அபிவிருத்தி

ஜோன் அமரதுங்க - பொது அமைதி

ஜோசப் மைக்கல் பெரேரா - உள்துறை

காமினி ஜயவிக்ரம பெரேரா - உணவு பாதுகாப்பு

மங்கள சமரவீர - வெளியுறவு

கரு ஜயசூரிய - புத்த சாசனம்

லக்ஸ்மன் கிரியெல்ல - தோட்டத்துறை

ரவி கருணாநாயக்க - நிதித்துறை

ரவுப் ஹக்கீம் - நகர அபிவிருத்தி, நீர்வளம்

பாட்டாளி சம்பிக்க ரணவக்க - மின்சாரம், எரிசக்தி

ராஜித சேனாரத்ன - சுகாதாரம்

துமிந்த திஸாநாயக்க - நீர்ப்பாசனம்

கபீர் ஹசிம் முதலீட்டு ஊக்குவிப்பு துறை

குணவர்த்தன - நிலமேம்பாட்டுத் துறை

சஜித் பிரேமதாஸ வீட்டு வசதி

விஜேதாஸ ராஜபக்ச - நீதித்துறை

கயந்த கருணாதிலக - ஊடகத்துறை

நவீன் திஸாநாயக்க - சுற்றுலாத்துறை

அர்ஜுன ரணதுங்க - துறைமுகங்கள்

ரிசாத் பதியூதின் - தொழில் மற்றும் வர்த்தகம்

பழனி திகாம்பரம் - தோட்ட அபிவிருத்தி

டி.எம்.சுவாமிநான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அகிலவிராஜ் காரியவசம் - கல்வி

தலதா அத்துகோரள - வெளிநாட்டு வேலைவாய்ப்பு

ரஞ்சித் மத்தும பண்டார - போக்குவரத்து

பி.ஹெரிசன் - சமூக சேவை

சந்திராணி பண்டார - மகளிர் விவகாரம்

இணை அமைச்சர்கள்:

ஹர்ச டி சில்வா - பொருளாதார அபிவிருத்தி

எரான் விக்ரமரத்ன முதலீட்டு ஊக்குவிப்பு

சுஜீவ சேனசிங்க நீதித் துறை

சம்பிக்க பிரேமதாஸ - தொழில் மற்றும் வர்த்தகம்

விஜயகலா மகேஸ்வரன் - மகளிர் அலுவல்கள்

அஜித் பி. பெரேரா - வெளிவிவகாரம்

வசந்த சேனாநாயக்க - சுற்றுலா

அனோமா கமகே - நீர்ப்பாசனம்

துணை அமைச்சர்கள்:

நந்திமித்ர ஏக்கநாயக்க - கலாசார, கலைதுறை

பைசஸ் முஸ்தபா - சிவில் விமான சேவை

வி.ராதாகிருஷ்ணன் - கல்வி

ரோசி சேனாநாயக்க - சிறார் நலத் துறை

பாலித ரங்கேபண்டார - மின்சாரம், எரிசக்தி

திலிப் வெதஆராச்சி - மீன்பிடி, நீரியல்வளம்

ருவான் விஜேவர்த்தன - பாதுகாப்பு

ரஜீவ விஜேசிங்க - உயர்கல்வி

கருப்பையா வேலாயுதன் - கைத்தொழில்

நிரோசன் பெரேரா - இளைஞர் விவகாரம்.

இலங்கைபுதிய அமைச்சரவை பதவியேற்பு

You May Like

More From This Category

More From this Author