Published : 04 Jul 2019 12:31 PM
Last Updated : 04 Jul 2019 12:31 PM

வார ராசி பலன்கள் ஜூலை 04 முதல் 10 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் மிக வலுவான நிலையில் சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் நீங்கும். உத்தியோகத்தில், நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். மேலிடம் சொல்வதைக் கேட்பது சிறந்தது. சக பணியாளர்களிடம் மேலிடம் பற்றிப் புகார் கூற வேண்டாம்.

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். நண்பர்களால் சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளுக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உறவினர்கள் வகையில் வீண் கருத்து மோதல்கள் ஏற்படலாம். பெண்களுக்கு, எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். கலைத் துறையினருக்கு, வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, முக்கியஸ்தர்களின் நட்பால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு, கவனத் தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமை மாரியம்மனை வணங்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் சனியால் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் இடர்பாடுகள் அகலும். உத்தியோகத்தில் குறிக்கோளற்ற அலைச்சல், கூடுதல் உழைப்பு இருக்கும். குடும்பத்தில் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம்விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.

சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு, சமையல் செய்யும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, தனிமையாக இருக்கத் தோன்றும். அரசியல்வாதிகள் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையைச் செய்து முடிப்பதற்குத் தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு, இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. பாடங்களைக் கவனமாகப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

எண்கள்: 2, 9

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் தன்னம்பிக்கை வளரும். வாக்குஸ்தானத்தைச் செவ்வாய் பார்ப்பதால் வாக்குவன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

குடும்பத்தில் பிரச்சினைகள் தீரும். கணவன், மனைவிக்குள் திருப்தியான உறவு நிலவும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புதியதாக வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு, திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு, கல்வி முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை அன்று நெய் தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் செலவு ஏற்படும். காரிய தாமதம் இருக்கும். உடல்சோர்வு, மனச்சோர்வு வரலாம். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உடையும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்நோக்கியியிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும்.

கணவன், மனைவிக்குள் மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு, எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்னர் தீர ஆலோசிப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: சனிக்கிழமை சனி பகவானை வணங்கி காகத்துக்கு எள் சாதம் வைக்க வேண்டும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை கிடைக்கும். அனைத்திலும் விழிப்புடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் கடினமான பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும். வேறு வேலைக்குச் செல்லலாமா என்று கூடத் தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன், மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிணக்குகள் மறையும்.

சந்தோஷச் சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்பு தானாக அமையும். பெண்களுக்கு, அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, வீண்பழி உண்டாகலாம். அரசியல்வாதிகள் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, கவனமாகப் பாடங்களைப் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 2, 6

பரிகாரம்: குருவாயூரப்பனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் முக்கியமான காரியங்களைச் சுலபமாக நடத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தைத் தரும். பெண்களுக்கு, துணிச்சல் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் சேரும். மாணவர்களுக்கு, கல்வி முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3

பரிகாரம்: விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x