Published : 11 May 2017 11:26 am

Updated : 21 Jun 2017 17:58 pm

 

Published : 11 May 2017 11:26 AM
Last Updated : 21 Jun 2017 05:58 PM

வார ராசிபலன் 11-05-2017 முதல் 17-05-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

11-05-2017-17-05-2017

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பது சிறப்பாகும். குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் தன் உச்ச ராசியில் உலவுவதால் ஓரளவு நலம் புரிவார். நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் நலம் புரிவார்கள். 12, 13 தேதிகள் சந்திராஷ்டம தினங்கள் என்பதால் எச்சரிக்கை தேவை. அதன் பிறகு தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். பெற்றோராலும் மக்களாலும் நலம் உண்டாகும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும்.

கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிலபுலங்களால் ஓரளவு வருவாய் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகள் லாபம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். செவ்வாய் 2-லும், சனி 8-லும் அமர்ந்து பரஸ்பரம் பார்த்துக் கொள்வதால் குடும்பத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 14, 17.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

‎நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 3, 6, 7.‎

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. .ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்கள் விலகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

பெண்களால் ஆடவர்களுக்கு நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். அழகுப் பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும் போதும், விளையாட்டின்போதும் பாதுகாப்பு தேவை. புதனின் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 17.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: ஸ்ரீ மகாவிஷ்ணுவை வழிபடவும்.மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் சூரியனும் புதனும் சஞ்சரிப்பதால் மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். மக்களால் நலம் உண்டாகும். ஊகவணிகம் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். நல்லவர்கள் நலம் புரிய முன்வருவார்கள்.

அயல்நாட்டுத் தொடர்பு வலுப்பெறும். போக்குவரத்துத் துறை லாபம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகள் லாபம் தரும். 12-ல் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடும்போது பாதுகாப்பு நடவடிக்கை தேவை. இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் அங்காரகனையும் வழிபடுவது நல்லது.கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியன் புதன் ஆகியோரும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நிலபுலங்களால் லாபம் கிடைக்கும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். முக்கியமான பொறுப்புகளும் பதவிகளும் பெற வாய்ப்புக் கூடிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள்.

வழக்கில் வெற்றி கிட்டும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் பழகுவார்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். 15-ம் தேதி முதல் சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் பண வரவு மேலும் கூடும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களால் ஆதாயம் கிடைக்கும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். மேலதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் உங்களைப் பாராட்டுவதுடன் ஆதரவாகவும் இருப்பார்கள். 5-ல் சனி இருப்பதால் மக்களால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மே 12, 14, 17.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 8-ல் சுக்கிரனும் 9-ல் சூரியனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. நல்ல தகவல் வந்து சேரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் அளவோடு நலம் புரிவார்கள். குடும்ப நலம் சிறக்கும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும்.

அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களால் அளவோடு வருவாய் கிடைத்துவரும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். ஜன்ம ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் உலவுவதால் இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும் என்றாலும் சமாளித்து வருவீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. பிறரிடம் சுமுகமாகப் பழகவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 15-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்திற்கு மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்புக்கள் தேடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: துர்க்கைக்கும் விநாயகருக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல்புதனும் உலவுவது நல்லது. குடும்ப நலம் சீராகும். பேச்சில் திறமை வெளிப்படும். தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் நலம் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கியே இருப்பார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும்.

வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். சூரியன், செவ்வாய், குரு, ராகு ஆகியோர் அனுகூலமாக உலவாததால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். அரசுக் காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். 15-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.

திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: கருநீலம், மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7, 8.

பரிகாரம்: கருமாரி அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுவும்.


ராசிபலன்இந்து ராசிபலன்வார ராசிபலன்ராசி பலன்சந்திரசேகரபாரதிஜோதிடம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author