Published : 19 Jun 2014 11:56 AM
Last Updated : 19 Jun 2014 11:56 AM

வார ராசி பலன் 19-6-2014 முதல் 25-6-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும் உலவுவதால் குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சாற்றல் பளிச்சிடும்.

பண வரவு அதிகமாகும். முகப்பொலிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். மாணவர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள்.

எதிரிகள் அகலுவார்கள். சுப செலவு ஏற்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். 21-ம் தேதி முதல் ராகு கன்னிக்கும், கேது மீனத்துக்கும் இடம் மாறுகிறார்கள். ராகுவின் பலம் கூடுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும

போக்குவரத்து இனங்களால் ஆதாயம். வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆக்கம். கேது 12-ம் இடம் மாறினாலும் குரு பார்வையைப் பெறுவதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வீண் செலவுகள் குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள் : ஜூன் 22, 25.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு.

எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம் : சக்தி வழிபாடு நலம் தரும்.

ரிஷிபம்

ரிஷப ராசிக்காரர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப் பொலிவு கூடும். கலைஞானம் வெளிப்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். திறமை வீண்போகாது. இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் சூழும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. சளி, இருமல் தொல்லை தரும். 21-ம் தேதி முதல் ராகு 5-ம் இடம் மாறி, செவ்வாயுடன் கூடுவதால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். கேது 11-ம் இடம் மாறுவதாலும் குருவின் பார்வையைப் பெறுவதால் தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 22, 25.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: நவக்கிரகங்களில் குருவையும், அவருக்கு அதிதேவதையான தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். வேத பாடசாலைகளுக்குப் பொருளுதவி செய்யவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்களது ஆசிகள் கிடைக்கும். காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பணப் புழக்கம் அதிகமாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கலைத் துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். வெளிநாடு செல்ல வாய்ப்புக் கூடிவரும். 21-ம் தேதி முதல் ராகு 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாத.

கேது 10-ம் இடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 22, 25.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் துர்கையையும் வழிபடுவது நல்லது. விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் சிறப்பு. ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் 10-ல் கேதுவும் 11-ல் சுக்கிரனும் புதனும் உலவுவது சிறப்பாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

இன்ஜினீயர்களது நோக்கம் நிறைவேறும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறையினர் சுபிட்சம் காண்பார்கள்.

21-ம் தேதி முதல் ராகு 3-ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மனத்துணிவு கூடும். பயணம் பலன்களைத் தரும். குரு பார்வையைப் பெறுவதால் நலம் புரிவார்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 22, 25.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 5, 6, 7, 9.

பரிகாரம்: ஜன்ம குருவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. சூரியன் 12-ல் இருப்பதால் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும். சூரிய காயத்ரி சொல்வதும் நல்லது. பெரியவர்களிடமும், மேலதிகாரிகளிடமும் பணிவு தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், சனியும் 10-ல் புதனும் சுக்கிரனும் 11-ல் சூரியனும் உலவுவதால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெறுவீர்கள்.

வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவர். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.

21-ம் தேதி முதல் ராகு 2-ம் இடத்துக்கும் கேது 8-ம் இடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். பயணத்தால் சங்கடம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 22, 25.

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், பச்சை, இளநீலம்.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரையும், விநாயகரையும் வழிபடவும். குரு கிரகத்துக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே

சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்ப்புக்கள் விலகும். செயலில் வேகம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். சுப காரியங்கள் நிகழும்.

கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். தான, தர்மப் பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். 21-ம் தேதி முதல் ராகு ஜன்ம ராசிக்கும் கேது 7-ம் இடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். எதிலும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் நலம் பெறலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 25.

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6.

பரிகாரம்: கருமாரி அம்மனையும் முருகனையும் வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x