Published : 16 Mar 2017 10:18 AM
Last Updated : 16 Mar 2017 10:18 AM

வார ராசிபலன் 16-03-2017 முதல் 22-03-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. அரசுக் காரியங்கள் இனிது நிறைவேறும். தந்தையால் நலம் உண்டாகும். முக்கியஸ்தர்களும், மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். எலெக்ட்ரானிக், கணிப்பொறி மற்றும் விஞ்ஞானத் துறைகள் ஆக்கம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

புதியவர்களின் தொடர்பும் அனுகூலமும் ஏற்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்க வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். 5-ல் கேதுவும்12-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவை. மறதியால் அவதி ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 20, 22 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், பச்சை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 4, 5.

பரிகாரம்: கேதுவுக்கும் விநாயகருக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது நல்லது. மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும்.

இயந்திரப் பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களுக்கு வரவேற்பு கூடும். பயணத்தால் காரியம் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். தான, தர்மப் பணிகளிலும்; தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 22 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை. l எண்கள்: 3, 4, 6, 9.

பரிகாரம்: சனிக்கும், கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் புதனும் சுக்கிரனும் 5-ல் தன் சொந்த வீட்டில் செவ்வாயும், 10-ல் வக்கிரமாக குருவும் உலவுவது நல்லது. மனத்தில் துணிவு பிறக்கும். செயலில் வேகம் கூடும். எதிர்ப்புக்கள் அகலும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும்.

அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். இயந்திரப் பணியாளர்கள், பொறியாளர்கள் தங்கள் திறமைக்குரிய முன்னேற்றத்தைக் காணச் சந்தர்ப்பம் கூடிவரும். 12-ல் சனி இருப்பதை மறக்கலாகாது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை தேவைப்படும். சிலர், குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 20, 22 (பிற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை. l எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: கண், கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவிசெய்யவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ஆம் இடத்தில் உலவுவது விசேடமாகும். சூரியன், சுக்கிரன் அனுகூலமாக உலவுகிறார்கள். முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். பண வரவு கூடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஜலப் பொருட்களாலும் எண்ணெய் வகைகளாலும் ஆதாயம் கிடைக்கும். தொழிலாளர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.

விவசாயிகளுக்கு வாய்ப்புக்கள் கூடிவரும். கறுப்பு நிறப் பொருட்கள் லாபம் தரும். பழைய பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது திறமை வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் நேரும். சிக்கன நடவடிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 17, 18.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், ஆரஞ்சு, வெண்மை. l எண்கள்: 1, 6, 8.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனைகள் செய்யவும்.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகளிலும், பந்தயங்களிலும், விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். வழக்கில் அனுகூலமான திருப்பம் ஏற்படும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின் சாதனங்கள், தளவாடங்கள், கட்டிடப் பொருட்கள், சிவப்பு நிறப் பொருட்கள் லாபம் தரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும்.

பண நடமாட்டம் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். உழைப்பு வீண்போகாது. திறமையால் முன்னணிக்கு வருவீர்கள். செயலில் வேகம் அதிகரிக்கும். பொதுப் பணிகளில் ஈடுபாடு கூடும். பிரச்சினைகள் எளிதில் விலகும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 20.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு. l எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: நாகரை வழிபடவும். துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்யவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவது நல்லது. செவ்வாய் 2-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவு நலம் புரிவார். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தோற்றப்பொலிவு கூடும். பெண்களாலும், வாழ்க்கைத் துணைவியாலும் அனுகூலம் ஏற்படும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வாரப் பின்பகுதியில் பயணத்தின் மூலம் ஒரு காரியம் நிறைவேறும்.

ஜன்ம ராசியில் சூரியன் இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும். பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 22 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை. l எண்கள்: 4, 6.

பரிகாரம்: சூரியனை வழிபடவும். பெரியவர்களை வணங்கி வாழ்த்துகள் பெறவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x