Published : 16 Mar 2017 10:18 AM
Last Updated : 16 Mar 2017 10:18 AM

வார ராசிபலன் 16-03-2017 முதல் 22-03-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன் சொந்த வீட்டில் வலுப்பெற்றிருக்கிறார். இதனால் உங்கள் சுயபலம் கூடும். வீர, தீர, பராக்கிரமம் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். மனத் துணிவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். தொழில் கூட்டாளிகள் உதவுவார்கள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. சனி 8-ல் இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டி வரும். வீண் செலவுகள் கூடும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழிலாளர்கள், விவசாயிகள், சுரங்கப் பணியாளர்கள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது. அரசாங்கத்தாரால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பயணத்தின் போது பாதுகாப்பு தேவை. வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 17, 20.

திசைகள்: தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

‎நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை. l எண்கள்: 6, 7, 9.‎

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் பலம் பெற்றிருக்கிறார். சூரியன், புதன், குரு, கேது ஆகியோர் அனுகூலமாக உலவுவதால், எதிர்ப்புக்கள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை வெளிப்படும். பணநடமாட்டம் திருப்தி தரும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். ஊகவணிகம் லாபம் தரும்.

பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிக்கை போன்ற துறைகள் ஆக்கம் தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். பயணத்தின் போதும், இயந்திரங்களில் பணிப்புரியும் போதும் பாதுகாப்பு தேவை. வாரப் பின்பகுதியில் சிறுசங்கடம் ஏற்படும். வீண் விவகாரங்கள் வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 17, 18.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை. l எண்கள்: 1, 3, 5, 6, 7.

பரிகாரம்: துர்க்கை, காளியை வழிபடவும்.



மிதுன ராசி வாசகர்களே

சூரியன், செவ்வாய், புதன், சனி, ராகு ஆகியோர் வலுத்து இருக்கிறார்கள். உற்சாகம் கூடும். மக்களால் நலம் பெறுவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டு வேலைகளுக்காக காத்திருப்போருக்கு நல்ல செய்தி உண்டு. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும்.

பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்கத்தாராலும் உடன்பிறந்தவர்களாலும் நலம் ஏற்படும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். புதிய பதவி பட்டங்கள் வந்து சேரும். சகோதர, சகோதரிகளால் சகாயம் உண்டு.பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 20.

திசைகள்: கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு. l எண்கள்: 1, 4, 5, 6, 8, 9.

பரிகாரம்: விநாயகரை வழிப்பட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் உலவுவது விசேடமாகும். துணிவோடும் தன்னம்பிக்கையோடும் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் வருவாய் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தியைப் பெறுவீர்கள். போட்டிகளிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம், மின்சாரம், எரிபொருள் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். 5-ல் சனி இருப்பதால் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். மறதியால் அவதிப்பட நேரலாம். ராகு, கேதுவின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் குடும்பத்தில் சலசலப்புக்கள் இருந்துவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 20, 22 (பிற்பகல்).

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, இளநீலம். l எண்கள்: 6, 9.

பரிகாரம்: நாகரையும் சனியையும் வழிபடவும்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 8-ல் புதனும் உலவுவது நல்லது. செவ்வாய் 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். ராசிநாதன் 8-ல் உலவுவது குறை. அரசாங்கத்தாராலும், தந்தையாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் ஏற்படும்.

பண வரவு சற்று அதிகரிக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேற வாய்ப்புக் கூடிவரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். தான, தர்மப் பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்கள் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். தகவல் தொடர்பு இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு வார முன்பகுதி சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 20, 22 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, சிவப்பு, பொன் நிறம். l எண்கள்: 3, 6, 9.

பரிகாரம்: சூரியனுக்கு அர்ச்சனை செய்யவும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகமாகும். பேச்சில் திறமை கூடும். உடன்பிறந்தவர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் ஏற்படும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 20, 22 (பிற்பகல்).

திசைகள்: மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், மெரூன். l எண்கள்: 7, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x