Last Updated : 28 Jun, 2019 11:31 AM

 

Published : 28 Jun 2019 11:31 AM
Last Updated : 28 Jun 2019 11:31 AM

இந்த வார விசேஷங்கள்

ஆனி 13, ஜூன் 28, வெள்ளிக்கிழமை : ஸ்மார்த்த ஏகாதசி. திருவண்ணாமலை பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை. திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத் குஜாம்பிகை புறப்பாடு.

ஆனி 14, ஜூன் 29, சனிக்கிழமை : கிருஷ்ண பட்ச வைஷ்ணவ ஏகாதசி. கார்த்திகை விரதம். சிதம்பரம், ஆவுடையார் கோவில், உத்திரகோசமங்கை உள்ளிட்ட நடராஜர் திருத்தலங்களில், ஆனித்திருமஞ்சன உத்ஸவம் ஆரம்பம்.

ஆனி 15, ஜூன் 30, ஞாயிற்றுக்கிழமை : பிரதோஷம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு.

ஆனி 16, ஜூலை 1, திங்கட்கிழமை : மாத சிவராத்திரி, கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

ஆனி 17, ஜூலை 2, செவ்வாய்க்கிழமை : அமாவாசை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.

ஆனி 18, ஜூலை 3, புதன்கிழமை : ஆஷாட சுத்த பிரதமை. சிதம்பரம், ஆவுடையார்கோவில் முதலான திருத்தலங்களில் சிவபெருமான் பவனி. திருவஹிந்திரபுரம் ஸ்ரீராமன் ஜேஷ்டாபிஷேகம்.

ஆனி 19, ஜூலை 4, வியாழக்கிழமை : சந்திர தரிசனம். அமிர்த லக்ஷ்மி விரதம்.

ஆனி 20, ஜூலை 5, வெள்ளிக்கிழமை : சதுர்த்தி சாவித்திரி விரத கல்பம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம். மாலையில் ஊஞ்சல் சேவை. சுக்ல பட்ச சதுர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x