Published : 28 Mar 2018 19:16 pm

Updated : 28 Mar 2018 19:17 pm

 

Published : 28 Mar 2018 07:16 PM
Last Updated : 28 Mar 2018 07:17 PM

வார ராசிபலன் 29.03.2018 முதல் 04.04.2018 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

29-03-2018-04-04-2018

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளை கிடைக்கும். மகிழ்ச்சியான எண்ணங்கள் உண்டாகும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதால் உறவுகளில் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் உண்டு. வாகனங்கள் வாங்குவதில் தடை நீங்கும். தொழிலில் குழப்பம் நீங்கித் தைரியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும்.


கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு வழக்குகளில் சுமூக முடிவுகள் வந்து சேரும்.. வெளிநாட்டு வேலை, கல்வி முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சினை தீரும். எதிர்ப்புகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு, போட்டிகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு, மனக்குறைகள் நீங்கி நம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் தீரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டால் முன்னேற்றம் அடைவார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 5, 6, 8

பரிகாரம்: முருகனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.

 

 ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம்பூமி, வீடு, வாகனத்தால் லாபம் இருக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்விகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். 

வியாபாரிகள் கவனமாக இருப்பது நல்லது. கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். அக்கம்பக்கத்தில் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்வாதிகள், கடன் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். பெண்கள், எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தெற்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம் | எண்கள்: 1, 3, 4

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் வருவாய் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமை வந்து சேரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகளால் சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் அனுகூலம் ஏற்படும். எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடிக்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை உண்டு. அரசு பிரத்தியேகச் சலுகைகளைப் பெற முடியாமல் போகலாம். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள், நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். பெண்கள், வாகனங்களை உபயோகிக்கும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் சற்று கவனமாக இருக்கவும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

 அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, நீலம் | எண்கள்: 7, 8, 9

பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வலம் வரவும்.

 

 கடக ராசி வாசகர்களே

 இந்த வாரம் உங்களுக்கு எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வரலாம். அலுவலக நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும்.

தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். பெண்களுக்கு, எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உறவினர் வகையில் நன்மைகள் ஏற்படும். கலைத் துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழும் பாராட்டும் கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: திங்கள்கிழமை அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று ஒன்பது முறை வலம் வரவும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய அனுகூலம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சினைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு தங்குதடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.

வியாபாரிகளுக்குத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியல்வாதிகள், எதிர்பார்த்த பதவியை அடையலாம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். பெண்கள், உற்சாகமாகக் காணப்படுவர். அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். மாணவர்கள், தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பார்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை | எண்கள்: 1, 4, 5

பரிகாரம்: ஞாயிறு அன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்று மூன்று முறை வலம் வரவும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சினையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத் தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். வருமானத்தில் எந்தக் குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும்.

ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரப் பயணம் போக வேண்டி வரும். கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நிதிப் பிரச்சினை இருக்காது. எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். பெண்கள், குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் பாடங்களைப் படிப்பது சிறப்பானதாக இருக்கும்

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: கருநீலம், பச்சை | எண்கள்: 5, 6, 8

பரிகாரம்: புதன்தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வணங்கி வரவும்.

தவறவிடாதீர்!    ராசிபலன்இந்து ராசிபலன்வார ராசிபலன்ராசி பலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்Weekly horoscopeTamil horoscopeHindu horoscopeHindu tamil horoscopeTamil rasipalan

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x