Published : 20 May 2019 09:04 AM
Last Updated : 20 May 2019 09:04 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். எதிலும் பொறுமை தேவை.
**
ரிஷபம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.
**
மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.
**
கடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளி வட்டாரத்தில் பாராட்டு பெறுவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகள் நல்லபடியாக நிறைவேறும். பேச்சில் பொறுமை தேவை.
**
சிம்மம்: வீண் அச்சம், கவலைகள் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
**
கன்னி: தடைகளை மீறி, உங்கள் இலக்கை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
**
துலாம்: வருங்கால வளர்ச்சிக்காக அதிரடி திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். பெரியோர், மகான்களின் ஆசி கிடைக்கும்.
**
விருச்சிகம்: தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராமல் நம்பிக்கையோடு செயல்படுங்கள். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
**
தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் கோபம், எரிச்சலை ஏற்படுத்தும்.
**
மகரம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
**
கும்பம்: துணிச்சலாக முடிவு எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
**
மீனம்: தேவையற்ற மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
******

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x