Published : 24 Apr 2019 08:56 AM
Last Updated : 24 Apr 2019 08:56 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டியது வரும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்: திறமையுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும.

சிம்மம்: பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல் நீங்கும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள்.

கன்னி: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவு எடுப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்: எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணம் மகிழ்ச்சி தரும்.

தனுசு: வேலைச்சுமையால் சோர்வாகக் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது.

மகரம்: வாகனம் பழுதாகி சரியாகும். நவீன மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். யாருக்கும் பணம், வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம். சுபச்செலவுகள் அதிகரித்தபடி இருக்கும்.

கும்பம் : எண்ணம்போல் செயல்பட வேண்டும் என்று எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு ஏற்படும். கலைப்பொருள் சேரும்.

மீனம் : மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x