Published : 21 Apr 2019 08:45 AM
Last Updated : 21 Apr 2019 08:45 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? -12 ராசிகளுக்கு உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாலை முதல் எதிலும் நிதானம் தேவை.

ரிஷபம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: பழைய நண்பர்கள் மூலம் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பம் மற்றும் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

சிம்மம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கன்னி: தடுமாற்றம் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவ்வப்போது தலைதூக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாலை முதல் தொட்டது துலங்கும்.

விருச்சிகம்: வீண் செலவு, அலைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: மனப்போராட்டம், ஒருவித பதற்றம் இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மாலை முதல் சாதகமான சூழல் நிலவும். பணவரவு உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x