Published : 23 Jan 2019 05:48 PM
Last Updated : 23 Jan 2019 05:48 PM

வார ராசிபலன் ஜனவரி 24 முதல் ஜனவரி 30 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் நல்ல பலன்களைப் பெற போகிறீர்கள். உற்சாகம் பிறக்கும். சுற்றி இருப்பவர்களின் முக்கியத்துவம் புரியும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரவு அதிகரிக்கும். உடலில் சிறு சிறு தொந்தரவுகள் வரலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சிரத்தை தேவை. பண பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் நிலவும். எடுக்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

புத்தி சாதுரியத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு, முயற்சிகள் சாதகமான பலன்தரும். அரசியல்வாதிகள், ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கலைத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லாக் கஷ்டங்களும் நீங்கி அமைதி உண்டாகும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். அலுவலகத்தில் பிரச்சினைகள் குறையும். அலுவல் ரீதியான பயணம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும்.

கணவன் மனைவிக்குள் மனகசப்பு மாறும். பெண்களுக்கு உற்சாகம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள். கலைத் துறையினருக்கு புதிய மாற்றங்கள் இருக்கும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மாணவர்களுக்கு, வெற்றி பெறுவோமென்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: வெள்ளிகிழமை பெருமாள் தரிசனம் செய்வது மிக உத்தமம். நவகிரகத்தில் சுக்கிரன் பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் அருளைப் பெறுகின்ற வாரம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி செய்வீர்கள்.பணவரவு திருப்தி தரும். சிக்கலான விஷயங்களை சாதுரியமாகப் பேசி முடிப்பீர்கள். வீண் பயத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பயணங்கள் செல்வீர்கள். முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகஸ்தர்கள் சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்படச் செய்து பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். மேலிடத்தின் ஆதரவு, அனுசரணை கிடைக்கும்.

தேவையற்ற வீண் பேச்சுக்களைக் குறைப்பதால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு, சாமர்த்தியமான பேச்சினால் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்ப்பீர்கள். கலைத் துறையினருக்கு, தொழில் சிக்கல்களை பேச்சுவார்த்தையினால் தீர்த்து விட முடியும். அரசியல்வாதிகள் விடாப்பிடியாக சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி நிதி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, நீலம்

எண்கள்: 3, 5

பரிகாரம்: பெருமாள் கோயிலில் அவல் நிவேதனம் செய்து நெய் விளக்கேற்றி வாருங்கள்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் மனக்கவலை தோன்றி மறையும். வர்த்தக ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிதானமாகச் செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்துப் போவதும் நல்ல பலன்களைத் தரும். எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் பிரிந்தவர்கள் சேருவார்கள். சகோதர சகோதரிகளிடம் பிணக்குகள் மறையும். வாழ்க்கைத் துணைக்காகச் செலவு செய்வீர்கள். பெண்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள். மாணவர்களுக்கு, பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை,மஞ்சள்

எண்கள்: 2, 3

பரிகாரம்: அம்மனுக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்யுங்கள்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் தைரிய வீர்ய ஸ்தானத்தில் பலம் குன்றி காணப்பட்டாலும்  தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தித் தெளிவு உண்டாகும். நல்லது கெட்டதைப் பிரித்தறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திருப்தி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய பதவி, உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபச்செலவு இருக்கும். குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.

பெண்களுக்கு, சேமிப்புகள் அதிகரிக்கும். அலுவல் ரீதியாக ஊக்கம் கிடைக்கும். கலைத் துறையினர் நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்கலாம். அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் உடனடி வெற்றி கிடைக்கும். ஊழியர்களால் நன்மை உண்டு. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தொய்வு நிலை நீங்கும். ஆனாலும் எந்த ஒரு விஷயத்தையும் கவனத்துடன் கையாள்வது நல்லது. செல்வாக்கு மிக்க நபர்களின் உதவி கிடைக்கும்.  தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ரீதியிலான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் விறுவிறுப்படையும். முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். மேலிடத்திலிருந்து இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்துச் செய்வது நன்மை தரும். பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு தேவையற்ற பிரச்சினைகள் வந்து போகும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பதில் சுறுசுறுப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை,ப்ரவுன்

எண்கள்: 5, 9

பரிகாரம்: புதன்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x