Published : 31 Dec 2018 07:11 PM
Last Updated : 31 Dec 2018 07:11 PM

2019 : மிருகசீரிஷ நட்சத்திரத்துக்கான பலன்கள்!

எந்த வேலையையும் தனது வேகமான நடவடிக்கைகளால் சரியான நேரத்தில் செய்யும் மிருகசீரிஷ நட்சத்திரத்து அன்பர்களே!

இந்தப் புத்தாண்டில் சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும்.  நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த  காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் குறையும். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின்  ஆதரவும் கிடைக்கும்.

+: உத்தியோகம் - வியாபாரம் சிறப்பாக இருக்கும்

-: எடுத்துக் கொண்ட காரியங்களில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க திட்டமிடுதல் அவசியம்

பரிகாரம்:  முருகனை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் சஷ்டி, கிருத்திகை நாட்களில் முருக தரிசனம் செய்யுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். சர்க்கரைப்பொங்கல், கேசரி நைவேத்தியம் செய்யலாம். தொழில் போட்டிகள் குறையும்.

மதிப்பெண்கள்: 71%

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x