Published : 31 Dec 2018 07:22 PM
Last Updated : 31 Dec 2018 07:22 PM

2019: மகம் நட்சத்திரத்துக்கான பலன்கள்!

வாழ்க்கையில் சுயம்புவாக வெற்றி பெறும் மக நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி  பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே  இடைவெளி காணப்படும்.  பிள்ளைகள்  புத்திசாதுர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியைத் தரும்.

பெண்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன் ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அரசியல்வாதிகள் முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களைப் படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

+: முயற்சிகளில் வெற்றி

-: திட்டமிட்ட பணிகளில் தொய்வு

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சினை தீரும். முடியும் போது, அம்பாளுக்கு புடவை சார்த்துங்கள். செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். வெண்பொங்கல் அல்லது கேசரி நைவேத்தியம் செய்யுங்கள்.

மதிப்பெண்கள்: 74%

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x