Published : 31 Dec 2018 07:39 PM
Last Updated : 31 Dec 2018 07:39 PM

2019: சித்திரை நட்சத்திரத்துக்கான பலன்கள்

பணத்தை விட மனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சித்திரை நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை.

புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.  புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபாரப் போட்டிகள் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.  கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.

பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதுர்யமான பேச்சின் மூலம் பிரச்சினைகள் தீரும். பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினர் நிதானமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

+: போட்டிகள் குறையும்.

-: எதிர்காலம் பற்றி மனக் குழப்பங்கள் அதிகமாகும்.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றுங்கள். அர்ச்சனை செய்து வழிபடுங்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.  மனதில் மகிழ்ச்சி தங்கும்.  

மதிப்பெண்கள்: 74%

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x