Last Updated : 17 Dec, 2018 06:28 PM

 

Published : 17 Dec 2018 06:28 PM
Last Updated : 17 Dec 2018 06:28 PM

அரங்கனிடம் திருமங்கையாழ்வார் கோரிக்கை! – வைகுண்ட ஏகாதசி பெருமை

வைகுண்ட ஏகாதசி (18.12.18). இந்த நன்னாளில் வைகுண்ட ஏகாதசியின் பெருமையையும் அரங்கனின் அருளாடல்களையும் அறிந்து உணர்ந்து பெருமாளை தரிசிப்போம். வளமும் நலமும் பலமும் பெறுவோம்!  

வைஷ்ணவ தலங்கள் பலவற்றில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, மார்கழியில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டாலும் வைகுண்ட ஏகாதசி என்றதும் திருச்சி திருவரங்கமே நினைவுக்கு வரும்.

ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு  ஒரு வரலாறு உண்டு.

திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகி நின்ற  ஸ்ரீரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட ரங்கநாதரும் அப்படியே ஆகட்டும் என அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

பெரும்பாலான வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நிதி  இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியே அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்தும் கூட, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்கிறார் ஸ்ரீரங்கம் முரளிபட்டர்.

வைகுண்ட ஏகாதசியில் பெருமாளை சேவிப்போம், வளமும் நலமும் பெற்று வாழ்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x