Published : 11 Oct 2018 10:24 AM
Last Updated : 11 Oct 2018 10:24 AM

வார ராசி பலன் - 11-10-2018 முதல் 17-10-2018 வரை (மேஷம் முதல் - கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காணலாம். தொழில், வியாபாரம் வலுவாக நடக்கும். உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேறு வேலைக்கு முயல்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்களுக்கு, சிக்கலான விஷயங்களைக்கூட சுமுகமாக முடித்து விடலாம். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீவிர ஆலோசனையில் ஈடுபட வேண்டும். மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது தொடர்பான கவலை நீங்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி l திசைகள்: கிழக்கு, தெற்கு l நிறங்கள்: வெள்ளை, சிவப்பு, மஞ்சள் l எண்கள்: 2, 3, 9 l பரிகாரம்: முருகனுக்குப் பால் பாயச நிவேதனம் செய்து வணங்க வேண்டும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் குருவின் நேரடிப் பார்வையால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். மனக்குறை இருக்கும். புதிய நபர்கள், எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் கவனமாகப் பேசிப் பழக வேண்டும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கியை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இழுபறியான காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமான அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளால் மனநிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு, எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்படுவீர்கள். கலைத் துறையினருக்கு, மற்றவர்களுக்கு உதவப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். அரசியல்வாதிகள், சிறிய வேலையையும் கூடுதலாகச் சிரத்தையெடுத்துச் செய்ய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, வெற்றிபெறத் திட்டமிட்டுப் படிக்க முற்படுவீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி l திசைகள்: மேற்கு, தென்மேற்கு l நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம் l எண்கள்: 2, 6 l பரிகாரம்: அம்மனை வணங்க எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும். கவலை நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் நெருக்கடியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளிப்போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் இருக்கும். ஆனாலும் பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேச வேண்டும். குழந்தைகளின் எதிர்கால நலன் பற்றிச் சிந்திப்பீர்கள். உங்களது உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு, எந்தக் காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு, ஆசிரியர், சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் l திசைகள்: மேற்கு, வடக்கு l நிறங்கள்: பச்சை, மஞ்சள் l எண்கள்: 2, 5 l பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன் ஜென்மப் பாவம் நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல் அசதி நீங்கும். கவலைகள் அகலும். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் இருந்த தயக்க நிலை மாறும். பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களில் தடங்கல் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளுவை உணர்வார்கள். மேலதிகாரிகள், உங்கள் செயல்களில் குறை காணலாம். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்த தடைகள் அகலும். பெண்களுக்கு, காரியங்களில் நன்மை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத் துறையினர் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த மெத்தனப்போக்கு மாறும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் l திசைகள்: வடக்கு, வடமேற்கு l நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை l எண்கள்: 2, 5 l பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை இட்டு வணங்க பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் தனித்தன்மையுடன் செயலாற்றுவீர்கள். உடல்நிலை முன்னேற்றம் பெறும். செலவு கட்டுக்குள் இருக்கும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாகச் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் பணவரவு நன்றாக இருக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். உறவினர்களுக்காக விருப்பமில்லாத காரியத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். பெண்களுக்கு, தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத் துறையினருக்கு, திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி l திசைகள்: கிழக்கு, தென்மேற்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் l எண்கள்: 1, 3, 6 l பரிகாரம்: சிவனுக்கு எலுமிச்சைப் பழ மாலை சமர்ப்பித்து வணங்க வேண்டும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் நெருக்கடியான பிரச்சினைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றப் பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு, திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடித்து நிம்மதி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினருக்கு, அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டுப் படித்து வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சி ஏற்படும்படியான சம்பவங்கள் நிகழும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன் l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு l நிறங்கள்: பச்சை, மஞ்சள் l எண்கள்: 3, 5 l பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் படைத்துவணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x