Published : 16 Aug 2018 10:53 AM
Last Updated : 16 Aug 2018 10:53 AM

ஆன்மிக நிகழ்வு: சாதுர்மாசிய வேள்வி

துறவு - உலகையே துறப்பதா? இல்லை! உலகுக்கெல்லாம் அன்பு செய்வதே! உலகு உய்ய வேண்டும். அதற்கு உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன் அருள் வேண்டும். அவ்வருளைப் பெற்று அளித்திடவே சாதுர்மாசியம். இரண்டு மாதம் நோன்பு என்ற மாபெரும் வேள்வி!

மைசூர் அவதூத தத்த பீடாதிபதி சீர்வளர்சீர் கணபதி சச்சிதானந்தா அவர்களின் வழித் தோன்றலும், ஆன்மிக வாரிசுமான தத்த விஜயானந்த தீர்த்தர் நோன்பு மேற்கொண்டு வருகிறார். சென்னை வேளச்சேரி ஸ்ரீகணபதி சச்சிதானந்தர் ஆசிரமத்தில் ஜூலை மாதம் 27 முதல் தொடங்கிய இந்த வேள்வி செப்டம்பர் 25 வரை நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாளும் வேள்விகள், வழிபாடுகள், அறச் செயல்கள், கணபதி முதல் மும்மூர்த்தி வடிவான தத்தாத்ரேயர் என்று பல திருமூர்த்தங்களுக்கான மந்திரங்கள் பல நூறாயிரம் முறை இந்த வேள்வியில் ஓதப்படுகின்றன!

உடல், உள்ளம், உயிர் நலம் பெற யோகப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கோயிலுக்கு வருபவர்களுக்கு மட்டுமின்றி மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும் அன்னம் வழங்கப்படுகிறது.

ஏர் நடக்கும்! சீர் நடக்கும்! இயல், இசை, நாடகம் நடக்கும்! அறச் செயல் நடக்கும்! உலகம் மகிழ்ந்து உயர்ந்து நடக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x