Published : 01 Aug 2018 03:39 PM
Last Updated : 01 Aug 2018 03:39 PM

வார ராசிபலன் ஆகஸ்டு 02 முதல் ஆகஸ்டு 08 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சஞ்சாரத்தால் எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அகலும். தடைபட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில், மறைமுக எதிர்ப்புகள் நீங்கி வேலைகளில் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில், வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைக்குச் செவிகொடுப்பார்கள்.

பெண்களுக்கு, பணிகளில் இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, கட்சி மேலிடத்தின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். யாருக்கும் உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம். கலைத் துறையினருக்கு, வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் ஆலயத்துக்குச் சென்று அரளிப்பூ சமர்ப்பிக்கவும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிப்பீர்கள். தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் சேமிக்கும் எண்ணம் தோன்றும். எந்தக் காரியத்திலும் தாமதம் இருக்கும். புதிய நண்பர்களிடம் கவனம் தேவை. செய்தொழிலில் மன நிம்மதியும் நன்மையும் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். போட்டி குறையும். பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.

அவர்களது திறமைகண்டு மகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்கும் எண்ணம் உருவாகும். கலைத் துறையினருக்கு, சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தை அனுசரித்துச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 2, 6

பரிகாரம்:  அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் சொல்லிலும் செயலிலும் நிதானத்தைக் கடைபிடிப்பீர்கள். ராசியை சனி பார்ப்பதால் வீண் அலைச்சல் உண்டாகும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்துச் செய்வது நல்லது. அமைதி பாதிக்கும்படியான நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாகப் பேசிப் பழக வேண்டும். தொழில், வியாபாரத்தில் கூடுதலான கவனம் தேவை. உத்தியோகத்தில், உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். அலுவலக சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களைக் கூற வேண்டாம்.

கணவன் மனைவிக்குள் மனத்தாங்கல் நீங்கும். உறவினர்களுக்குள் வேற்றுமைகள் அகலும். பெண்களுக்கு, வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத் துறையினருக்கு, அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாகச் செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு, பெரியோர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: வடமேற்கு, வடக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 3, 5

பரிகாரம்:  புதன்கிழமை லட்சுமி நரசிம்மரை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் கருமமே கண்ணாக இருப்பீர்கள். கொஞ்சம் பதற்றத்தை குறைத்துக் கொள்வது நல்லது. முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். ராசியிலிருக்கும் கிரகக் கூட்டணியால் வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பவர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகள் குறையும். உத்தியோகத்தில் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் குடும்பாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சி நீடிக்கும்.

உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு, தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனத்தெளிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு, அனைத்து நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மேலிடம் அனுசரணையாக நடந்து கொள்ளும். மாணவர்களுக்கு, திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 2, 3

பரிகாரம்: குல தெய்வ வழிபாட்டால் பிரச்சினைகள் விலகும். 

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களிடம் திறமை அதிகரிக்கும். தனஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரனின் இருப்பு பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். துணிச்சல் உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும். உத்தியோகத்தில் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்னதைச் செய்து முடிப்பது நல்லது. குடும்பாதிபதி புதன் சஞ்சாரத்தால் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு, மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு, தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு, நலல பலன்கள் கிடைத்தாலும் விழிப்புடன் செயல்படுவது நன்மைதரும். மாணவர்களுக்கு, கவனமாகப் பாடங்களை படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்:  தினமும் பைரவரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். 

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பீர்கள். லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி புதனுடன் ராகு இருப்பதால் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்களால் லாபம் கிடைக்கப் பெறலாம். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உறவினர்கள், நண்பர்களால் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு, மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கலைத் துறையினருக்கு, வேலைகள் சீரான நிலையில் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பாடுபட வேண்டியிருந்தாலும் சூழ்நிலை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, நீலம் | எண்கள்: 5, 6

பரிகாரம்: அய்யப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வலம் வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x