Last Updated : 04 Jul, 2018 05:11 PM

 

Published : 04 Jul 2018 05:11 PM
Last Updated : 04 Jul 2018 05:11 PM

வேதாந்தம் பரமானந்தம்

ன்மா, மறுபிறப்பு, வேதங்களின் மேன்மை, கடவுள் பற்றிய புரிதல் போன்ற பல தலைப்புகளில் எளிமையாக பாமரர்களும் தெரிந்துகொள்ளும் விதமாக சொற்பொழிவு நிகழ்த்துகிறார் பூஜ்யஸ்ரீ பரமானந்த பாரதி சுவாமிகள்.

காரணமின்றி காரியம் இல்லை

ஜகத்தில் ஒன்றை அறுதிஇட்டுச் சொல்வதற்காக ஓர் உதாரணம் தேவைப்படுகிறது. சொல்லவந்த விஷயம் விளங்கியபின் அதற்காக உதாரணமாகச் சொன்னவை எல்லாம் வெறும் பேச்சாக, மாயையாகப் போய்விடுகிறது.

தங்கம் என்றால் என்ன என்று ஒருவன் இன்னொருவனிடம் கேட்கிறான். அவனோ இதோ என்று தன் மோதிரத்தைக் காண்பிக்கிறான். முதலில் கேள்வி கேட்டவனுக்கு குழப்பம். நாம் தங்கத்தைத்தானே கேட்டோம். இவன் எதற்கு மோதிரத்தைக் காட்டுகிறான்?

சரி, இன்னொருவரிடம் அதே கேள்வியைக் கேட்கிறான். அவனோ தன் கையிலிருந்த காப்பைக் காட்டுகிறான். கேள்வியைக் கேட்டவருக்கு நம்முடைய கேள்வியை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.

இதே கேள்வியை மூன்றாவதாக ஒருவரிடம் கேட்டான். அவனோ தன் கழுத்திலிருந்த மாலையைக் காட்டினான்.

மூன்று அணிகலன்களுமே தங்கத்தில் செய்ததுதான். தங்கத்தைத் தெரிந்து கொள்வதற்கு இந்த அணிகலன்கள் தேவைப்பட்டன. இந்த அணிகலன்களில் தங்கம் இருக்கிறது. ஆனால் தங்கத்தில் இந்த அணிகலன்கள் எல்லாம் இருக்குமா? என்ற கேள்வியை நம்மால் எழுப்ப முடியாது. காரியத்தில் காரணம் இருக்கும். ஆனால் காரணத்தில் காரியம் இருக்குமா இந்த ஜகத்தில் பிரம்மம்தான் காரணம். அதைத் தெரிந்து கொள்வதற்கான காரியங்களே நாம்.

இப்படித் தெரிந்ததிலிருந்து தெரியாத ஆன்மிக தத்துவங்களைப் புரியவைக்கும் அவரின் சொற்பொழிவு தினமும் மயிலாப்பூர், சம்ஸ்கிருதக் கல்லூரி அருகே திரு.வி.க. முதல் தெருவிலிருக்கும் சாவித்ரி ஓரியண்டல் பள்ளி வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு வரும் ஜூலை 12 வரை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x