Published : 20 Jun 2018 06:19 PM
Last Updated : 20 Jun 2018 06:19 PM

வார ராசிபலன் 21.06.2018 முதல் 27.06.2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை இருக்கும். காரியத்தடை, வீண் அலைச்சல் அகலும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் பதற்றத்துடன் காணப்படுவார்கள். நிலுவைத் தொகை வந்து சேரலாம்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சின்னச் சின்ன  கருத்து வேற்றுமைகள் வரும். குழந்தைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு, அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கலைத் துறையினருக்கு பண பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகள், கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு, கவனத்தைச் சிதற விடாமல் வகுப்பைக் கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் மனகலக்கம் நீங்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்துக்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்துச்  செயல்பட்டவர்கள் அடங்குவார்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும்,  மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவால் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும்.

உத்தியோகத்தில் புதிய பதவி, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தினரின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு, மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.  கலைத் துறையினர், ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் ஆலோசனை கேட்டு மக்கள் வருவார்கள். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலிருக்கும் சனி பகவானால் எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு ஏற்படும்.  பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  மனதைரியம் உண்டாகும். தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள்.

அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பப்  பிரச்சினைகள் சாதகமாக முடியும். குழந்தைகள் கல்விக்காகப் பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு, பயணங்களால் செலவு ஏற்படும். கலைத் துறையினருக்கு, துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்:  சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வணங்க  காரியத் தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். எதிர் பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் அரசாங்கப் பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்தப்போக்கு மாறும். வியாபாரப் பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். புத்திசாதுரியத்துடன் நடந்து கொள்வது மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, திட்டமிட்டபடி பாடங்களைப் படித்துக் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம் | எண்கள்: 3, 6

பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமை தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்க்கும் பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியத்திலும் இருந்து வந்த தடை, தாமதம் நீங்கும். எல்லாவற்றிலும் இருந்த பயம் நீங்கும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில்  இருந்த இழுபறி அகலும். தொழில், வியாபாரத்தில் மந்தப் போக்கு நீங்கி வேகம் பெறும். வியாபாரம் தொடர்பான பயணங்களைத் திட்டமிட்டபடி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில், பதற்றம் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் நிலவும். மனம்விட்டுப் பேசுவதால் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பெண்களுக்கு, வாக்குவாதங்களையும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களையும் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, நற்பெயர் கிடைக்கும். லாபம் கிடைக்கும்.  அரசியல்வாதிகளின் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்துக் காரிய வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு,  கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: மஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பேச்சில் இனிமை, சாதுரியத்தினால் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்  நீங்கும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். சுபநிகழ்ச்சிகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெண்களுக்கு, எதிர்பாராத பணவரத்து இருக்கும். கலைத் துறையினருக்கு மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு,  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு | எண்கள்: 1, 3

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x