Published : 09 May 2018 07:11 PM
Last Updated : 09 May 2018 07:11 PM

வார ராசிபலன் 10.05.2018 முதல் 16.05.2018 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் தீவிர உழைப்பும், அதிக முயற்சியும் இருக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சுபச்செலவு உண்டாகலாம். பயணத்தால் சாதகம் உண்டு.தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில், வீண் அலைச்சலைச் சந்திக்க நேரலாம். அலுவலக வேலைகள் உடனே முடியும். நற்பெயர் கிடைக்கும். வெளிநபர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம்.

சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு, எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம். கலைத் துறையினர், தங்களுக்குச் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்த்தல் நல்லது. அரசியல்வாதிகள், முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளைத் திட்டமிட்டு செய்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி;

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 4, 9

பரிகாரம்: செவ்வாய்கிழமையன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனத்தில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் தொடர்பாகக் காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். நயமாகப் பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றைச் செய்வீர்கள். பெண்களுக்கு, காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக் கூடும். கலைத் துறையினர் புதிய காரியங்களைச் செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் பார்த்துச் செய்ய வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, சுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். சுணக்க நிலையும் மாறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்:  வெள்ளிக்கிழமை  நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுரியத்தால் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். உடல்சோர்வு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். பெண்களுக்கு, திருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல செய்தி வந்து சேரும். நெடுநாள் கடன் தீரும். அரசியல்வாதிகள், வேலைகளை திட்டமிட்டு ஆரம்பிப்பது நல்லது. மேலிடத்திலிருந்த இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைக் கவனமாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: பெருமாளுக்குத் துளசியால் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியவர்கள் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். உத்தியோகம் தொடர்பாகப் பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதுரியத்தால் மேலதிதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் குழப்பம் நீங்கும். பெண்களுக்கு, காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மாணவர்களிடம்  புத்தி சாதுரியம் வெளிப்படும். கல்வியில் தொய்வு நீங்கும். கலைத் துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். சோதனைகளும் இருக்கும். முன்னோர் வழிபாடு மிகவும் முக்கியம். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லைகள் குறையும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 2, 6 பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தவரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்துகளில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் அதிக கவனம் தேவை. கலைத் துறையினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி வந்து சேரும். பணவரவில் ஓட்டம் இருக்கும். அரசியல்வாதிகள், புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல்புரசலாகத் தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 1, 6

பரிகாரம்:  தினமும் சிவபுராணம் சொல்லி சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் முக்கியமான நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வந்து சேரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரத்து இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனத்துக்கு இதமளிக்கும்.

பெண்களுக்கு, நிதானமாகப் பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்லபடியாக வரும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாகத் தோன்றும்.  கலைத் துறையினருக்கு நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் அகலும்.அரசியல்வாதிகளுக்கு, உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின் குணம்பெறுவீர்கள். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5, 6

பரிகாரம்:  முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x