Published : 25 Apr 2018 05:37 PM
Last Updated : 25 Apr 2018 05:37 PM

வார ராசிபலன் 26.04.2018 முதல் 02.05.2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் கோபம், கொந்தளிப்பு காணப்படும். விருப்பத்துக்கு மாறாகவே எதுவும் நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலனைத் தரலாம். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மனநிறைவு காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில்  அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகளின் விஷயங்களில் கவனமாகச் செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலைத் தரும். பெண்களுக்கு, கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத் துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. மாணவர்களுக்கு, சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாகப் பேசுவது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தென் கிழக்கு, வடக்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் | எண்கள்: 4, 5, 9

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் மனத்தில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் தேடி வருவார்கள். பிறருக்கு உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரத்தில் துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் அனுசரித்துச் செல்வார்கள்.

குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு, துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். உங்களின் கடமைகளைச் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். கலைத் துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மாணவர்களுக்குப் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: தென் மேற்கு, மேற்கு

நிறங்கள்:மஞ்சள், சிவப்பு | எண்கள்: 6, 8, 9

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும்.. எடுத்த காரியத்தை முடிப்பதிலிருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலைத் தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமெடுக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாகத் தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேலதிகாரிகள், சக பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி ஏற்பட பரஸ்பரம் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையைத் தரும். வழக்கு, விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் மெத்தனம் காட்ட வேண்டாம்..

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென் மேற்கு

நிறங்கள்:பச்சை, ஆரஞ்சு | எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: சித்தர்களை வியாழக்கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தரும். மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாகச் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் செயல் திறமை வெளிப்படும். அதனால் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்ளால் அதிகப்படியான வருமானம் இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீர்கள். பெண்களுக்கு, எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கலைத் துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெயரும், புகழும் உயரும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: : திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: கருநீலம், சிவப்பு | எண்கள்: 1, 5, 6

பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தால் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரிவர செய்து பாராட்டினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேற்றுமை நீங்கும்.

வீண் வாக்குவாதங்கள் அகலும். கணவன் மனைவி பரஸ்பரம் அனுசரித்துச் செல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கவுரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலையைத் தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: கரும் பச்சை, நீலம் | எண்கள்: 6, 7, 9

பரிகாரம்: சனிக்கிழமையன்று எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்துக்கு வைக்கக் கஷ்டங்கள் குறையும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதைத் தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்துக்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடந்தாலும்  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்ல வேண்டும்.

சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு, ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாகப் பேசி மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது காரிய வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்றுப் பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். கலைத் துறையினருக்கு, அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு, கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, தெற்கு

நிறங்கள்:மஞ்சள், ஆரஞ்சு | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x